பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #49

டருளிய பெருமானேத் தொழவேண்டுமென்னும் பேரார் வத்தால் உந்தப்பெற்றுக் கரையிலே கட்டப்பட்டிருந்த ஒடத்தைக் கட்டவிழ்த்து அதன்கண் அடியார்களே யேற்றி,

கொட்டமே கமழும் கொள்ளம் பூதுார் நட்ட மாடிய நம்பனே யுள்க

செல்லவுந்துக சிந்தையார் தொழ நல்குமாறருள் நம்பனே.

என வரும் திருப்பதிகத்தினேப் பாடிப் போற்றித் தமது நாவன்மையினேயே கோலாகக் கொண்டு ஓடத்தைச் செலுத்துவாராயினர். எடுத்த திருப்பதிக்கம் முடிவ தற்குள் ஒடம் அக்கரையினே யடைந்தது அடியார் களுடன் திருக்கொள்ளம் பூது சையடைந்த பிள்ளையார் ஆற்றில் ஒடம் செலுத்தும் வண்ணந் தமக்கு அருள் புரிந்த பெருமானைப் பரவி மகிழ்ந்தனர். கொட்ட மேகமழும்” என்ற முதற் குறிப்புடைய திருக்கொள்ளம் பூதூர்த்திருப்பதிகம் ஆற்றில் ஒடத்தைச் செலுத்துதற் பொருட்டுப் பாடப்பெற்றதென்பது, அதன் கண் பாடல் தோறும் செல்லவுந்துக சிந்தையார் தொழ, நல்கு மாறருள் நம்பனே' என ஈரடிமேல் வைப்பாக வரும் தொடரால் நன்கு புலனும். ஞானசம்பந்தர் இத் திருப் பதிக த்தினேப் பாடிய அளவில் அவர் ஏறியமர்ந்த ஒடம் திருக்கொள்ளம் பூதுார்க்கரையினே அனேந்ததென்பது,

  • ஒடம் வந்தணேயுங் கொள்ளம் பூதூர் எனவரும் இப்பதிகத் திருக்கடைக்காப்பினுல் இனிது விளங்கும். இவ்வற்புத நிகழ்ச்சியை,

நதிப்புனலினெதிர் பஃறியுய்த்தன 1 எனவும்,

  • மருவினிய கொள்ளம்பூ துார்க்குழகன் நாவா யதுகொடுப்ப உள்ளமே கோலாக ஆன்றினன் ?

1. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 38-ஆம் பாடல். 2. 2咒 திருத்தொகை.