பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

பன்னிரு திருமுறை வரலாறு


எனவும் வரும் தொடர்களால் நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.

பாண்டியன் அவையிற் சமண ரொடு தாம் செய்த அனல் வாதத்திலே எரியில் இட்டும் வேவாத பதிக முடைய இறைவராகிய நள்ளாற்றீசரை வணங்க விரும்பிய ஞானசம்பந்தர், திருக்கொள்ளம் பூது ரி லிருந்து புறப்பட்டு வழியிலுள்ள பல தலங்களையும் பணிந்து திருநள்ளாற்றினேயடைந்தார். இறைவன் திருமுன்னர் நின்று எந் காய், தென்னவன் முன்னிலே யில் அமணரோடு செய்த அனல் வாதத்திலே தீயிலிட்ட ஏடு எரியாது பச்சையாகத் திகழும்படி என்னுள்ளத் துணையாய்த் திருவாலவாயில் அமர்ந் திருந்தருளியவாறு எங்ங்னம்’ என வியந்து வினவு வார் பாடக மெல்லடி’ என்னுந் திருப்பதிகத்தினேப் பாடிப் போற்றினர்.

புத்தரை வாதில் வென்றது

பின்பு திருத்தெளிச்சேரியை வணங்கிப் புத்தர்கள், வாழும் போதிமங்கை அருகே வரும்பொழுது சிவனடி யார்கள் பரசமய கோளரி வந்தான்’ என்று சின்னம், காளம் முதலிய பல்லியங்களே இயம்பி ஆரவாரித்தார் கள். அந்த ஆரவாரத்தினேக் கேட்கப் பொருத புத்தர்கள், தம்சமயக் கல்வியில் மேம்பட்ட புத்த நந்தியென்பவனே அடைந்து முறையிட்டார்கள். இச்செய்தியைக் கேட்டு உளங் கனன்ற புத்தநந்தி என்பான் தேரர் கூட்டத்துடன் அங்கு விரைந்து வந்தான். சிவனடியார்களே நோக்கி நீங்கள் எங்களே வாதில் வென்றபின் அல்லவா நுமது வெற்றிக்கு அடையாளமாகிய சின்னம் முதலிய வற்றைப் பிடித்தல் வேண்டும்’ எனக் கூறித் தடுத்து நிறுத்தின்ை. அதனேக் கேட்டு மனம் பொருத அடியார்கள், அந்நிகழ்ச்சியை ஞானசம்பந்தரிடஞ் சென்று தெரிவித்தனர். அதுகேட்ட பிள்ளேயார்