பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பன்னிரு திருமுறை வரலாறு


அடியார் கூட்டத்தை எதிர்த்து நின்று தடுத்த புத்த நந்தி என்பான் ஞானசம்பந்தருடைய திருமுறைப் பாடலாகிய அத்திரவாக்கில்ை தலே அறுபட்டு வீழ்ந்த செய்தியை,

நேர்வந்த புத்தன் தலையைப் புவிமேற் புரள்வித்த

வித்தகப் பாடல் விளம்பினன்'

என வரும் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் நம்பியாண்டார் நம்பி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்பரைக்கண்டு மகிழ்தல்

போதிமங்கையிற் சிவநெறி பரப்பிய திருஞான சம்பந்தர் திருக்கட ஆரிறைவனைப் பணிந்து அங்க மரும் நாளில் அப்பர் எங்குற்ருர்’ என அடியார்களே வினவினர். அப்பர் திருப்பூந்துருத்தியிலுள்ளார் என அடியார்கள் சொல்லக்கேட்டு அவரைக் காணும் பெருவிருப்புடன் பல தலங்களே வணங்கிக் காவிரித் தென்கரையை யடைந்து திருப்பூந்துருத்திக்குச் செல்வாராயினர். ஆளுடைய பிள்ளே யார் வருகின்ருர் என அறிந்த அப்பரடிகள், திருப்பூந்துருத்தி எல்லேயி லேயே முன்சென்று திருத்தொண்டர் கூட்டத்துடன் தாமும் ஒருவராகக் கலந்து பிள்ளேயாரது முத்துச் சிவிகையினைத் தாங்கி வந்தனர். அப்பொழுது ஞான சம்பந்தருள்ளத்திலே ஒருவகை யுணர்ச்சியுண்டாக "அப்பர் தாம் எங்குற்ருர் இப்பொழுது என அடியார் களே வினவினர். அவ்வுரை கேட்ட நா வுக்கரசர், நெஞ் சம் நெக்குருதி நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்தெய்தப்பெற்று இங்குற் றேன்’ என்ருர். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையை விட்டிறங்கி இவ்வாறு செய்தருள்வ தென்னே’ எனக் கூறி அப்பரடிகளே வணங்கினர். ஞான சம்பந்தர்க்கு எளியேனுற் செய்யத்தக்கது வேறு யாதுளது எனக் கூறி அப்பரும் உடன் வணங்கினர். அங்கு நின்ற தொண்டர்கள் யாவரும் பெருமக்களிருவரது நண்பின்