பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் #53

திறத்தைக்கண்டு உளமுருகி இறைஞ்சிப் போற்றினர் § {

நண்பிற் சிறந்த நாவரசருடன் திருப்பூந்துருத்திப் பெருமானேப் பணிந்தேத்திய ஞானசம்பந்தர், திருநாவுக்கரசரது திருமடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அப்பர், பிள்ளையாரை நோக்கி, போக்கும் வரவுமாகிய நிகழ்ச்சியை வினவினுர், பிள்ளே யார் பாண்டி நாட்டில் நிகழ்ந்த செயல்களே அரசர்க்கு விரித்துரைத்தார். அவற்றைக் கேட்ட நாவுக்கரசர் பிள்ளேயாரை நோக்கித் திருநெறித்தொண்டெனும் வான்பயிர் தழைக்கச்சூழும் பெருவேலி யாயினிக்’ எனத்தொழுது போற்றினர். அன்பின் பெருவெள்ளம் அனேய மங்கையர்க்காசியாரது மாட்சியையும் தவம் பணிகுலச் சிறையாரது தொண்டின் சிறப்பையும் பிள்ளேயார் எடுத்துரைத்தார். பாண்டிமாதேவியார் குலச்சிறையார் என்னும் இவர்களது திருத்தொண் டின் சிறப்பினேக்கேட்டு மகிழ்ந்த திருநாவுக்கரசர், அ வ் வி ரு வ ச து தொண்டினேயேற்று மகிழும் திருவாலவாயிறைவனேப் பணியும் பெருவிருப்புடைய ரானுர். அப்பரடிகள் தொண்டை ந ா ட் டி ன் சிறப்பினேச் சொல்லக்கேட்ட ஞானசம்பந்தர், சான் ருேர் வாழும் அந்நாட்டிலுள்ள திருத்தலங்களே வணங்க விரும்பினர். வாகீசர் பிள்ளே யார் பால் விடை பெற்றுப் பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

பின்பு திருஞானசம்பந்தர் அடியார்களுடன் காவிரியின் வடகரையையடைந்து நெய்த்தானம், ஐயாறு, பழனம் முதலிய திருத்தலங்களைப் பணிந்து பாடி மறையவர் மகிழ்ந்து எதிர் கொள்ளக் காழிப் பதியையடைந்தார்; சிவிகையிலிருந்து இறங்கித் திருத்தோணிபுரக் கோயிலுட் புகுந்து மாதொரு பாகனர் மலரடி பணிந்தார்; உற்றுமை சேர்வது மெய்யினேயே’ என்னும் திருவியமகத்திருப்பதிகத்தைப் பாடினர். மதுரை மன்னவனகிய பாண்டியனது பேரவையின் முன்னர்த் திருப்பதிகம் எழுதப்பெற்ற