பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் * 55

பருகிக் கைதொழுது மகிழ்ந்த ஞானசம்பந்தர், 'உண்முைலேயுமையாளொடும் உடனுகிய ஒருவன்’ என்னும் திருப்பதிகம் பாடினர். பின்னர் அண்ணுமலே மீது வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருவடித் தாமரைகளேத் தம் முடிக்கணிந்து பேரின்பமடைந் தார். ‘பூவார் மலர் கொண்டு’ என்னும் பதிகம் பாடிச் சில நாள் அங்கு அமர்ந்திருந்தார்.

ஆண்பனை பெண்பனையாதல் பின்பு வடதிசை நோக்கிச் சென்று தொண்டை நாட்டில் திருவோத்துரையடைந்து இறைவனேப் போற்றியிருந்தார். அந் நாளில் சிவனடியார் ஒருவர் திருஞான சம்பந்தரை வணங்கி நின்று, எளியேன் இறைவனுக்கு அடித் தொண்டன். சிவனடியார்களுக் கெனத் தண்ணிர் இறைத்து வளர்த்த பனேகளுள் ஒன்றேனும் காய்த்திலது, இதனேயறிந்த சமணர்கள் இப்பனேகளைச் சிவனருளால் காய்க்கும் படி செய்ய முடியுமா என வினவி, என்னே இகழ்ந்துரைக்கின் ருர்கள் என முறையிட்டார். அது கேட்ட பிள்ளையார் திருக் கோயிலினுள்ளே போந்து,

பூத்தேர்ந் தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லே யெண்ணுங்கால் ஒத்துர் மேய ஒளிமழுவாளங்கைக்

கூத்தீர் உம்ம குணங்களே.

என்ற பதிக த்தைப் பாடித் திருக்கடைக்காப்பில்,

குரும்பை யாண்பனே யீன்குலே யோத்துனர் அரும்பு கொன்றை யடிகளேப் பெரும்புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினே வீடே.

என முடிக்குமளவில், அங்கிருந்த ஆண்பனேக ளெல்லாம் பெண்பனேகளாக மாறிக் குரும்பையின்று காய்த்தன. அதனேக்கண்ட அடியார்கள் அதிசயித்