பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

பன்னிரு திருமுறை வரலாறு


தார்கள். இத்திருவருள் நிகழ்ச்சியை நேரிற் கண்ட சமணர்கள் பலரும் தமது சமயத்தை வெறுத்துச் சிவநெறியை மேற்கொண்டு திருஞானசம்பந்தரை வணங்கினர்கள்.

'திருவோத்துர் ஆண்பனே யைப் பெண்பனேயா கென்னும் பெருவார்த்தை தானுடைய பிள்ளே” .

என ஞான சம்பந்தரைப் பாராட்டு முகத்தால் இவ்வற். புத நிகழ்ச்சியை நம்பியாண்டார் நம்பி குறிப் பிட்டுள்ளமை காணலாம்.

காஞ்சி காளத்தி முதலிய தலங்களைப் பணிதல்

திருவோத்து ரிறைவரைப் போற்றிய ஞான சம்பந்தர், திருமாகறல், குரங்கனின் முட்டம் ஆகிய பதிகளேப்பணிந்து காஞ்சிநகர மக்கள் முகமலர்ந்து எதிர்கொள்ளக் கச்சிமா நகரிற் புகுந்து திருவேகம்பத் திருக்கோயிலே வலம்வந்து மங்கை தழுவக்குழைந்த திருவேகம்பப் பெருமானே வணங்கி மறையானே? என்னும் பதிகம்பாடித் திருவேகம்பத்து உறைவானே பல்லது என்னுள்ளம் உள்காது’ என நெஞ்சம் கசிந்து போற்றினர். அறப்பெருஞ்செல்வி யாகிய உ ைம யம்மையார் எழுந்தருளிய திருக்காமக் கோட்டத்தை இறைஞ்சி மகிழ்ந்தார். காஞ்சியில் அமர்ந்திருக்கும் பொழுது திருவிய மகம், திருவிருக்குக்குறள் முதலிய இன்னிசைப் பதிகங்களால் இறைவனைப்போற்றி இன்புற்ருர் கச்சி நெறிக்காரைக்காடு, அனேக தங்காவதம், கச்சிமேற்றளி, திருமாற்பேறு, 'திருவல்லம், இலம்பையங் கோட்டுர், விற்கோலம், தக்கோலம் (திருவூறல்) முதலிய தலங்களே வணங்கிப் பாடிப் பழையனூர்த் திருவாலங்காட்டின் எல்ஃலயிலே வந்தணைந்தார்.

1. ஆளுடைய பிள்ளேயார் திருத்தொகை.