பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 157

'இம்மையிலே இவ்வுலகத்தவர் யாவருங் காண எம்மை யாளும் காரைக்காலம்மையர் தம் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் எழுந்தருளிய திரு வாலங்காடு இதுவாகும் எனக்கருதிய ஞான சம்பந்தர் அம் மூதூரினே மிதிக்க அஞ்சி அப்பதியின் மருங் குள்ளதோர் ஊரிலே அன் றிரவு துயில்கொள் வாராயினர். அந் நிலேயில் திருவாலங்காட்டு இறைவர் ஆளுடைய பிள்ளையாரது கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ’ என வினவினர். இடை யாமத்தில் துயிலுணர்ந்தெழுந்த பிள்ளையார், இறை வனது திருவருளே யிது வெனவுணர்ந்து,

துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னே நினேவிப்பாரும் முனே நட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாள்ை கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம்மடிகளே.

என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர்.

இப்பதிகம் ஆலங்காட்டிறைவன் நள்ளிரவில் தோன்றி

யருளியபோது பாடப்பெற்றதென்பது,

'ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே வேந்தன் அருளாலே விரித்தபாடல் இவைவல்லார்’

என வரும் இதன் திருக்கடைக்காப்பினுல் இனிது புலம்ை.

பொழுது புலர்ந்தபின் ஞானசம்பந்தர் திருவாலங் காட்டு இறைவனே வணங்கித் திருப்பாசூர், வெண் பாக்கம் ஆகிய தலங்களே யிறைஞ்சினர். அன்புரு வாகிய கண்ணப்பர் வழிபட்ட காளத்தியிறைவனேக் காணவிரும்பித் திருக்காரிகரை பணிந்து செல்லும் போது அடியார்களே நோக்கி எதிரே தோன்றுவ தாகிய இம் மலேயாது’ என வினவ, அவர்கள் அது திருக்காளத்தி மலே என்றனர். அது கேட்ட பிள்ளேயார் வானவர்கள் தானவர்கள்’ என்ற திருப் பதிகத்தைப் பாடி அதன் கண்,