பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

பன்னிரு திருமுறை வரலாறு


வாய் கலச மாக வழிபாடுசெயும் வேடன் மலராகு நயனம் காய்கணேயி குலிடந் தீச னடி கூடுகாளத்தி மலேயே.

எனக் கண் ணப்ப நாயனரது அன்பின் திறத்தைச் சிறப்பித்துப் போற்றினர். பொன் முகலியாற்றின் கரையை யடைந்து காளத்திமலே மீதேறிச் சிவபெரும சீனப் பணிந்து வீழ்ந்தெழும் பிள்ளையார் தாம் கும்பிட்ட பயன் காண்பஈர்போல் வில்வேடர் பெருமாளுகிய கண்ணப்ப நாயனுரைக் கண்டு தாழ்ந் தார். உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை யுருவினேயும் அத்தகைய அன்பினுள்ளே நிலே பெற்றுத் தோன்றும் சிவபரம்பொருளையும் ஒருங்கே கண்ட விருப்பம் பொங்கப் புகலிப்பிள்ளேயார் பலமுறையும் வீழ்ந்து வணங்கினர். பின்பு காளத்தி மலேயினின்றும் இறங்கி அங்குள்ள திருமடமொன்றில் அமர்ந்து பெருமானேக் காலங்கள் தோறும் வழிபட்டிருந்தார். அங்கிருக்கும் நாட்களில் வடதிசையிலுள்ள திருக் கயில் யம், கேதாரம், கேசகரணம், திருப்பருப்பதம், முதலிய தலங்களே நினேந்து செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிப் பரவினர். பின்பு சந்தமாரகிலொடும்’ என்ற பதிகம்படி "எந்தையார் இணே யடி என் மனத் துள்ளவே எனக் காளத்தி இறைவனப் பணிந்து போற்றினர். அங்கிருந்தும் புறப்பட்டுப் பாலாற்றின் வடகரையையடைந்து திருவேற்காடு என்னுந் திருத் தலத்தை யிறைஞ்சினர். பின்பு அன்பர்கள் எதிர் கொள்ளத் திருவொற்றியூரையடைந்து உம்பர் பிரானே த் தமிழ் மாலேகளாற் போற்றிப் பரவி அப்பதி யில் அமர்ந்திருந்தார்.

எலும்பைப் பெண்ணுக்குதல்

மயிலாப்பூரில் வணிகர் குலத்துள் தோன்றி வாணிகத் தொழிலில் மேம்பட்டு எல்லேயில் செல்வ மெய்தினர் ஒருவர். உயிராகிய தம்மையும் உடையா கிைய இறைவனேயும் உள்ளவாறறிந்து செம்மையே புரிமனத்தினராய்ச் சிவநேசர் எனும் பெயர் பெற்று விளங்கினர். சிவனடித் தொண்டில் ஈடுபட்டு உருகிய