பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 159

மனமுடைய அவ்வணிகர், உண்மையற்ற புறச் சமயங்களைத் தமிழ்நாட்டைவிட்டு அகற்றவேண்டு மென்னும் உறுதியுடையராய் வாழ்ந்தார். சீகாழிப் பதியில் மூவாண்டில் அருள் ஞானம் பெற்ற ஞான சம்பந்தப்பிள்ளேயாரது பெருமையினே அடியார்கள் சொல்லக்கேட்டு ஆளுடைய பிள்ளே யார் திருவடிக்கீழ் எல்லேயில்லாத பேரன்புடையராயினர். அந்நாளில் சிவநேசர்க்குப் பெண் மகவு பிறந்தது. அழகிற் சிறந்த அக்குழந்தைக்குப் பூம்பா வையெனப் பெய ரிட்டார். பூம்பாவை என்னும் பெயர்பெற்ற அந்நங்கை வளர்ந்து மணப்பருவ மெய்தினுள். திருஞான சம்பந்தர் மதுரைக்குச் சென்று கூன்.பாண்டியனது வெப்புநோயையும் கூனேயும் தவிர்த்துச் சமணர்களே வாதில் வென்று தென்னுடெங்கும் சிவநெறி பரப்பிய செய்தியை அடியார்கள் சிவநேசர்க்குத் தெரிவித்தார் கள். அதனேக் கேட்டு அளவிலா மகிழ்ச்சியுற்ற சிவநேசர், காழிநாடுடையவர்க்கு அடியேன், யான் பெற்றெடுத்த பூம்பாவையையும் ஈட்டிய பெரு நிதியை யும் என்னேயும் அவர்க்கே உடைமையாகக் கொடுத்த னன்’ என மொழிந்தார்.

இங்ங் ைம் சம்பந்தர்க்கு உரியளெனச் சொல்லப் பெற்ற பூம்பாவை. ஒருநாள் கன்னி மாடத்தருகே யுள்ள பூஞ்சோலேயில் நறுமலர் கொய்யச்சென் ருள். அப்பொழுது ஒரு பாம்பு மல்லிகைப் பந்தரிலே மறைந்துவந்து அவள் விரலிலே தீண்டியது. அதனேயறிந்த தந்தையார் , விடந்தீர்க் கும் வன்மை யுடைய மருத்துவரையும் மந்திரம் வல்லாரையும் அழைத்து வந்து, மருந்தளித்தும் மந்திரித்தும் வேண்டுவன செய்து பார்த்தார். எனினும் விடம் நீங்காது தலேக்கேறினமையால் அவள் ஆவிசோர்ந்து இறந்தாள். சிவநேசர் அது கண்டு கலக்கமுற்ருரா யினும் திருஞானசம்பந்தர்க்கு இவள் உரியள் என்று கூறினமையால் இனித் துன்பமுற வேண்டியதில்லே’ யெனத்தெளிந்து ஒருவாறு துன்பம் நீங்கி ஞான சம்பந்தர் இங்கு வரும் வரையிலும் இவளுடம்பைத்