பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼

பில் பன்னிரு திருமுறை வரலாறு’ என்றதொரு துல் விரிவாக எழுதப்பெறவேண்டுமென்று விரும்பினர்கள். இப்பணியினே த் தமிழாராய்ச்சித் துறையினர் செய்து நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் பணித்தார்கள். இப்பணி தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் திரு. க. வெள்ளே வாரணன் அவர்களுக்கு அளிக்கப்பெற்றது.

திருமுறை நூல்களேக் கற்பதில் அதிக ஆர் வ முடைய அன் பர் வெள்ளைவாரணன் அவர்கள் சைவத் திருமுறைகளே ஆழ்ந்து பயின்று பன்னிரு திருமுறை வரலாற்றினே இ ன்டு பகுதிகளாக எழுதியுள்ளார். அவற்றுள் முதல் ஏழு திருமுறைகளாகிய தேவாரத் திருமுறைகளின் வரலாறு இப்பொழுது முதற்பகுதியாக வெளியிடப்படுகிறது.

இதன் கண், சைவத் திருமுறைகள் பன்னிரண்

டாக அமைந்த வரலாறும், திருஞான சமபந்தர், திருநாவுக்க ரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர்

மூவர் வரவாறுகளும், அவர்கள் வாழ்ந்த காலப்பகு தி

யும், தேவாரத் திருப்பதிகங்களின் தொகுப்பு முறை,

யாப்பமைதி, இசையமைதி, சொற்பொருள் நடை யமைதி, பொருட்பாகுபாடு, சங்கநூற் குறிப்புக்கள், திருக்குறளை எடுத்தாண்ட பகுதிகள், தேவார ஆசிரி

யர்கள் அறிவுறுத்திய திருநெறிக் கொள்கைள், பாடல்

பெற்ற தலங்கள், வைப்புத்தலங்கள் ஆகிய பகுதிகளும்

விரிவாக ஆராய்ந்து விளக்கப்பெற்றுள்ளன.

மூவர் தேவாரப் பதிகங்களைப்பற்றி இன்றியமை யாது அறிந்துகொள்ளவேண்டிய பொருட் குறிப் புக்கள் பலவற்றையும் தொகுத்துரைக்கும் முறையில் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. ஒரளவு தமிழ்ப் பயிற்சி யடையவர்களும் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன்