பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 163

இவ்வாறு விடத்தால் இறந்த பூம்பாவையின் அங் கத்தை மீண்டும் உயிர் பெற்றுவருக என அழைத்து இவ்வுலகில் வாழச்செய்த ஆளுடைய பிள்ளேயாரது அருட்செயலே,

‘வெய்ய விடம் மேவி யிறந்த அயில் வேற்கண் மடமகளே வாவென் றழைப்பித்திம் மண்ணுலகில் வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான்'

என வரும் தொடரால் நம்பியாண்டார் நம்பி குறிப்பிட் டுள்ளமை இவண் நினேக்கத் தகுவதாகும்.

புண்ணியப் பதிணுருண்டு எண்ணில்லாத பல்லாண்டுகள் படைப்புத் தொழிலே மேற்கொண்ட பிரமணுகிய முதியோன், தன்னுற் படைக்கப்பட்ட திலோத்தமை யென்னும் நங்கையின் பேரழகினைத் தனக்குரிய நான்கு முகங் களாலுங் கண்டு நுகர்ந்தான். திருவருள் நெறியிற் செல்லும் நற்பேறுடைய பதிருைண்டு இளைஞராகிய ஞ ன ச ம் ட ந் த ர், அத்திலோத்தமையினும் நலஞ் சிறந்த பூம்பாவையினிடத்தே, அவளது மேனி வனப் பினே நோக்காது சிவபெருமானது திருவருட் பெரு வெள்ளத்தை ஆயிரமுகத்தாற் காணுதற் குரியதாகக் கண்டு மகிழ்ந்தார். இந் நுட்பத்தினை,

எண்ணிலாண் டெய்தும் வேதசப் படைத்தக ளெழிலின்

வண்ணம் நண்னுநான் முகத்தாற்கண்டான் அவளினும் நல்லாள்

தன் பாத் புண்ணியப் பதினுருண்டு பேர்பெறும் புகலிவேந்தர் கண்ணுதல் கருணேவெள்ளம் ஆயிர முகத்தாற் கண்டார்.

என்ற செய்யுளிற் சேக்கிழாரடிகள் தெளிவாக விளக்கி யுள்ளார். இவ்வற்புதம் நிகழ்ந்தபொழுது ஞானசம்