பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 153

யேத் தி மகிழ்ந்தார்கள் என்பது வரலாறு. இந் நிகழ்ச்சியை,

முத்தமிழ்நூ. லெல்லாம் முழுதுணர்ந்த பிள்ளேயார்க் கொத்த மணமிது வென் ருேதித் தமர்களெல்லாம் சித்தங் களிப்பத் திருமணஞ்செய் காவணத்தே அற்றைப் பொழுதத்துக் கண்டுட னே நிற்கப் பெற்றவர்க ளோடும் பெருமனம்போய்ப் புக்குத்தன் அத்தன் அடியே அடைந்தான் அழகிதே. '

என வருந் தொடரில் நம்பியாண்டார் நம்பி தெளி வாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

இவ்வரலாற்றில் ஞான சம்பந்தர் தமது திருமணத் தில் உலகியல் முறைப்படி காதலியைக் கைப்பற்றித் தீயினே வலம் வருபவர், சுட்டுணர்வுக்கு அப்பாற்பட்ட இறைவனே தீயுருவில் நின்று அருள் செய்பவன் என்னும் மெய்ம்மையுணர்ந்து திருப்பெருமணத் திருக் கோயிலே வலம்வந்தார் எனக் கூறப்படுதலால், இறைவனுெருவனே மெய்ப்பொருளெனக் கொண்ட ஒரு நெறிய மனமுடையார் திருஞானசம்பந்தர் என்பது நன்கு தெளியப்படும்.

ஆளுடைய பிள்ளையார் சுற்றத்தொடர்பின் நீங்கி இறைவன் திருவடியையடைந்து இன்புறுதல் வேண்டு மென்னும் பெருவிருப்பத்தினுல் கல்லூர்ப் பெருமணம் வேண்டா என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத் தினைப்பாடிப் போற்றினரென்பது,

நறும்பொழிற் காழியுள் ஞானசம்பந்தன் பெறும்பத் நல்லூர்ப் பெருமனத்தானே உறும் பொருளாற் சொன்ன ஒண்தமிழ்”

என வரும் இப்பதிகத் திருக்கடைக் காப்பிலுைம்,

1. ஆளுடையபிள்ளே யார் திருத்தொகை.