பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 177

தொடராலும் அந்நிலையிற் சிவபெருமான், திலகவதி யார் உயிர் துறத்தலைத் தவிர்த்து இவ்வுலகில் வாழச் செய்து தம்மைப் பேணி வளர்க்கும் அம்மைாயாராகத் தம் பொருட்டுத் தந்தருளினரென்பதை "அம்மை யாரைத் தந்தார் ஆரூர் ஐயரே' என்ற தொடராலும் திருநாவுக்கரசர் தெளிவாக விளக்கிய திறம் நினேந்து மகிழத் தக்கதாகும். அம்மையாராயிஞர் ஆரூர் ஐயரே என்னுது அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே என அடிகள் குறிப்பிடுதலால், இறைவல்ை மருள் நீக்கியார்க்கு அளிக்கப்பெற்ற அம்மையா ராவார், அவரை இளம்பருவ முதற்கொண்டு அன் புடன் வளர்த்து நன்னெறிப் படுத்திய அவருடைய தமக்கையார் திலகவதியாரே யென்பது நன்கு L、 குைம். மருள் நீக்கிய ரைப் பெற்ற தாயும் தந்தையும் இளம்பருவத்தில் இறந்து போயினரெனவும் இந்திலே யில் உயிர்துறக்க எண்ணிய திலகவதியார் தம்பியைப் பாதுகாத்தற்பொருட்டு உயிர் தாங்கியிருந்தாரெனவும் சேக்கிழாரடிகள் கூறுஞ் செய்தி, திருநாவுக்கரசர் வாய் மொழியாகிய இத் திருக்குறுந்தொகையால் உறுதி யாதல் காண்க,

தருமசேனராதல்

இங்ங்னம் திலகவதியாரால் வளர்க்கப்பெற்ற மருள் நீக்கியார், மாசற்ற உள்ளத்திலே கவலை நீங்கப் பெற்றவராய்ப் பருவம் நிரம்பி அறிவு வளரப்பெற்று உலகியலுணர்வும் நன்கு வாய்க்கப்பெற்றர். இளமை யும் யாக்கையும் செல்வமும் நிலையுடையன அல்ல என வுணர்ந்து நில்லாதனவாகிய இவை நீங்குதற்கு முன்னரே நிலையுடைய நல்லறங்களைச் செய்ய எண்ணி ஞர். வெயில் வெம்மை தணியச் சோலேகளே வளர்த் தும் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத நல்ல நீர் நிறைந்த குளங்கள் பலவற்றைத் தோண்டியும் வறும்ை யாற் சென்றிரந்த இரவலர்களுக்கு இல்லேயென்னது