பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு i83

பணியை யேற்றுக்கொண்டு இறைஞ்சி நின் ருர், தம் த்ம்பியார் திருவதிகை வீரட்டான த் திருக்கே! யிலிற் புகுதற்குத் தகுதியுடையராம் வண்ணம் திலகவதியார் கயிலேப் பெருமான நினேந்து அவனது திருவருள் வண் ைமாகிய திருநீற்றினே த் திருவைந் தெழுத் தோதிக் கொடுத்தருளினர். பெருவாழ்வு வந்ததெனப் பணிந்தேற்ற மருள் நீக்கியார், திருவாளன் திருநீருகிய அதனே உருவார அணிந்து தமக்கு உய்யுந்ெநிதரும் தமக்கையார்க்குப்பின்னே தாமு புறப்பட்டார்.

சூலை தீர்த்து ஆட்கொள்ளப் பெறுதல்

நீறணிந்த மருள் நீக்கியாரது அகத்திருளும் நிறை கங்குற் புறத்திருளும் ஒருசேர மாறும்படி தோன்றிய திருப்பள்ளியெழுச்சிக் காலமாகிய விடியற் காலத்திலே, தவச்செல்வியாராகிய திலகவதியார், திருவல் கும் திரு மெழுக்கும் தோண்டியுங் கொண்டு திருவதிகை வீரட் டான த் திருக்கோயிலுள் தம்பியை அழைத்துக் கொண்டு புகுந்தார். உடன் சென்ற மருள் நீக்கியார், திருக்கோயிலேத் தொழுது வலங்கொண்டு நிலமிசை வீழ்ந்து இறைஞ் சினர். அந்நிலையில் இறைவன் திரு வருளால் தமிழ்மாலேகளாகிய திருப்பதிகங்களைப் பாடிப் போற்றும் உணர்வு அவர்க்கு உண்டாயிற்று. அவ் வுணர்வினுல் தூண்டப்பெற்ற மருள் நீக்கியார், தம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் சூலேநோய் நீங்கும்பொருட்டுப் புரமெரித்த பெரும கிைய திருவதிகை யிறைவனே நினேந்து உள்ளத்திலே பேரன்பு பொங்க,

கூற்ருயின வாறு விலக்க கிவீர்

கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்ருயடிக்கே யிர்வும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்ருதென் வயிற்றினகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட