பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை 3

ஆசிரியர்கள், சேக்கிழார் நாயனர் ஆகிய பெருமக்க ளாவர். இப்பெரியோர்கள் எல்லாம்வல்ல சிவபெரு மானது திருவருளின் பத்துள் திளேத்து மகிழும் நிலேயில் தாம் துய்த்துணர்ந்த பெருநலங்களேயெல் லாம் உலக மக்களனைவரும் பெற்று இன்புறும்படி தெளிவும் இனிமையும் பொருந்திய செந்தமிழ்ப் பாடல் களால் விரித்தருளிச் செய்துள்ளார்கள் . அருளாசிரிய ராகிய இவர்கள் திருவாய்மலர்ந்தருளிய தெய்வத் தமிழ்ப்பாடல்களே திருநெறித் தமிழ் எனவும் திருமுறையெனவும் வழங்கப்பெறுகின்றன.

முறை யென்ற சொல் நூல், பழமை, ஊழ், கூட்டு, கட்டு, முறைமை எனப் பல பொருள்களில் வழங்கு வது என்பது “ கோசமும் பழமையும் ஊழுங் கூட்டும், ஆ ர்ப் பு ம் முறைமையும் முறையெனலாகும் ’’ என வரும் பிங்கலந்தையால் உணரப்படும். இச்சொல் மேற்குறித்த பொருள்களோடு நியமம், தடவை, உறவு நூற்பகுப்பு, முதலிய பொருள்களில் வழங்குதலே உலக வழக்காலும் நூல் வழக்காலும் நன்கறியலாம். திருமுறையென்ற தொடரிலுள்ள முறையென்பது மேற் காட்டிய பல பொருள்களுள் நூலேயும் அதன் உட் பிரிவுகளேயுங் குறித்து வழங்குவதாகும். முறைப்பட இயற்றப்பெற்றமையின் முறையென்பது நூ ற் கு ப் பெயராயிற்று.

ஏடங்கை நங்கை இறையெங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை பாடுந்திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னி வாய்த் தோத்திரஞ்சொல்லுமே,

( 1067) என வரும் திருமந்திரப்பாடலிலும்,

இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவரை வேனென முயல்வ தொக்குமால் அறுமுக முடையவோர் அமலன் மாக்கதை சிறியதோ ரறிவினேன் செப்ப நின்றதே.