பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 擅9露

கவசமணிந்து சிவனடியே சிந்திக்குஞ் சித்தராய் எத்தகைய துன்பமுமின்றித் திருநாவுக்கரசர் இனி தமர்ந்திருந்த இவ்வற்புத நிகழ்ச்சியை,

சிவசம்பத்திடைத் தவஞ்செய்து

திரியும் பத்தியிற் சிறந்தவர்

திலகன் கற்ற சிட்டன் வெந்தொளிர்

திகழும் பைம் பொடித்தவண்டணி

கவசம் புக்குவைத் தரன் கழல்

கருதுஞ் சித்தனிற் கவன்றிய கரணங் கட்டுதற்கடுத்துள்ள களகம் புக்கநற் கவந்தியன்

என வரும் தொடரால் நம்பியாண்டார் நம்பி தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு திருநாவுக்கரசர் நீற்றறையினுள்ளே இறைவனது திருவடி நீழலெண் இன் புற்றமர்ந்தபொழுது,

மாசில் வீணே யும் மாலேமதியமும் வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசனெ ந்தை யிணே யடி நீழலே.

எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைத் திருப்பதி கத்தைப் பாடிப் போற்றினரென்பர் பெரியோர்.

வெய்ய நீற் றறையதுதான் வீங்கிளவேனிற்பருவம் தைவருதண் தென்றலனே தண்கழுநீர்த் தடம் போன்று மொய்யொணிவெண் ணில்வலர்ந்து முரன் றயா ழொலி

யினதாய் ஐயர் திருவடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே. எனவும்,

மாசில்மதி நீடுபுனல் மன்னிவளர் சென்னிய&னப் பேச இனியானே யுலகாளுடைய பிஞ்ளுகனே ஈசனே யெம் பெருமானே எவ்வுயிருந் தருவானே ஆசையி லாசாவ முதை அடிவணங்கி யினி திருந்தார்.