பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

பன்னிரு திருமுறை வரலாறு


கரைகாணுது வருந்தும் அறிவிலா மக்களே அத்துன்பக் கடலினின்றும் எடுத்து இறைவன் திருவடி களாகிய இன்பக்கரையிற் சேர்க்க வல்ல திருவைந்தெழுத்து, இருவினேப் பாசமும் அற்று இறைவன் கிருவடி நீழலே சரனெனக்கொண்ட தெளிந்த பேரறிவினராகிய திரு நாவுக்கரசரை, வலேஞர்களாற் சிறிய படகின் துனே கொண்டு கடத்தற்குரிய இக்கருங்கடலில் ஒரு கல் லின் மேல் மிதக்கச்செய்து, கரையேற்றிய இச்செய்தி வியந்துரைத்தற்குரியதோ’ எனச் சேக்கிழார் இவ் வற்புத நிகழ்ச்சியை உளமுருகிப் போற்றியுள்ளார்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் சம னர்கள் திருநாவுக்கரசரை நீற்றறையில் அடைத்தும் நஞ்சு கலந்த பாலடிசில்ே வஞ்சனேயால் உண்பித்தும் யானேயால் இடரச் செய்தும் கல்லோடு பிணித்துக் கட வில் பாய்ச்சியும் செய்த தீமைகளேயெல்லாம் திருநாவுக் கரசடிகளார் சிவபெருமான் திருவருட் டுனேயால் கடந்து உய்ந்த நிகழ்ச்சிகள் அவர் திருவாய்மலர்ந் தருளிய திருப்பாடல்களாகிய அகச்சான்றுகளாலும், அவரைப்போற்றிய நம்பியாண்டார் நம்பி, சேக்கிழா ரடிகள் முதலிய பெருமக்களின் வாய்மொழிகளாலும் தன்கு வலியுறுத்தப்பெற்றமை காணலாம்.

தோன் ருத்துனே யாயிருந்து தம்மைக் கடலினின் றுங் கரையேற்றிய சிவபெருமானத் திருப்பாதிரிப்புலி யூரில் வழிபட்டிருந்த கிருநாவுக்கரசர், திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளிய பெருமானே இறைஞ்சி மகிழவேண்டும் என்னும் பெருவேட்கையுடைய ராய்த் திருமாணிகுழி, திருத்தினே நகர் ஆகிய தலங்களே வணங்கித் திருக்கெடில நதியைக் கடந்து சென்ருர், சமணர்கள் செய்த இடர்களே யெல்லாம் இறைவனரு னால் வென்ற திருநாவுக்கரசர் அங்கு எழுந்தருளு தலைக் கேள்வியுற்ற திருவதிகை மாந்தர் அனைவரும் நகரை அலங்கரித்து மங்கல வாத்தியம் முழங்க வாகீ சரை எதிர்கொண்டு போற்றினர்கள். துய்மைதரும் வெண்ணிறனியப் பெற்ற பொன்மேனியும், இறைவ