பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 233

னது திருவடையாள மாலேயாகிய தாழ்வடமும், இறைவன் திருவடிகளே மறவாத சிந்தையும், நெஞ்சம் நெக்குருகி வெள்ளம் பாய்வதுபே ல் அன்பு நீர் பொழி பும் கண்களும், திருப்பதிகமாகிய பாமாலே பொருந் திய மலர் போலுஞ் சிவந்த திருவாயும் உடையவ சாய்த் திருநாவுக்கரசர் திருவதிகை வீதியுள்ளே புகுந் தருளினர். அவர்ைக் கண்ட மாந்தர்கள் கருனேயே புருவான இப்பெருந்தகையாரை நேரிற்கண்டும் சம னர்கள் தீங்கு விளைவிக்கச் செற்றங் கொண்டது எவ் வாறு’ என்று கூறித் தொழுது போற்றினர்கள்: ஆளுடைய அரசர் திருவதிகை வீரட்டானத் திருக் கோயிலிற் புகுந்து திரிபு மெரித்த விரிசடைக் கடவுளே வணங்கி நின்று, தாம் முன்னர்ச் சமண சமயத்திற் சார்ந்தொழுகிய காலத்திற் சிவபெருமானப் போற் குது இகழ்ந்திருந்த தமது அறியாமைக்குப் பெரிதும் வருந்தி,

வெறிவிரவு கூவிளநற் ருெங்கலான

வீரட்டத்தானே வெள்ளேற்றினுனைப் பொறியரவி ஞானப் புள்ளுர்தியானப்

பொன்னிறத்தினனேப் புகழ்தக்கானே அறிதற் கரியசீர் அம்மான்றன்னே

அதியரைய மங்கை அமர்ந்தான்றன்னே எறிகெடிலத்தானே இறைவன் றன்னே

ஏழையே குன்பண் டிகழ்ந்த வாறே.

எனத்தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப் பரவிஞர். இதன் கண் தெய்வங்கொள்கையில் தெளிவு பிறவாத சமணர்களுடன் கூடித் தமது வாழ் நாளே வீணே கழித்த எளிமையை நினேந்து ஆளு டைய வரசர் பெரிதும் மனங் கவல்கின் ருர்,

உறிமுடித்த குண்டிகைதங் கையிற்றுக்கி

ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக்கனுய்க்

கறிவிரவு நெய்சோறு கையிலுண்டு

கண்டார்க்குப் பொல்லாத காட்சியானேன்