பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

பன்னிரு திருமுறை வரலாறு


மறிதிரை நீர்ப் பவ்வநஞ் சுண்டான்றன்னே

மறித்தொருகால் வல்வினேயேன் நினேக்கமாட்டேன்.

எறிகெடில நாடர் பெருமான் றன்னே

ஏழையே குன்பண் டிகழ்ந்த வாறே.

எனத் தாம் முன்னுளில் சமண சமயத்திற் சார்ந் தொழுகியபோது சிவபெருமான நினையாத தமது அறியாமையை எடுத்துக்கூறி யிரங்குகின் ருச். இவ்வாறு திருநாவுக்கரசர் தமது ஏழைமையை நினேந்து வருந்திப் பாடினமையால் இப்பதிகம் ஏழைத் திருத்தாண்டகம் என்னும் பெயருடையதாயிற்று இதனுல் நாவுக்கரசர் தமது வாழ்நாளின் முற்பகுதியில். சமண சமயத்தைச் சார்ந்தெ ழுகியவரென்பதும் பின்பு சிவனருளால் சைவ நெறியை மேற்கொண்டவ ரென்பதும் இனிது விளங்குதல் காணலாம்.

சமணர்களது சொற்கேட்டுத் திருநாவுக்கரசரைப் பலவாறு துன்புறுத்திய பல்லவ மன்னன் , தான் செய்த துன்பங்களேயெல்லாம் வென்றேறிய திருநா வுக்கரசரது பெருமையினேக் கேள்வியுற்ருன். தன் னுடைய பழவினேகளாகிய பாசம் நீங்கப் பெற்றமை யால் அல்லல் நீங்கித் திருவதிகைப்பதியையடைந்து திருநாவுக்கரசர் திருவடிகளே இறைஞ்சிச் சிவநெறியை மேற்கொண்டான். மெய்யுணர்வு கைவரப் பெற்ற காடவகிைய அம்மன்னன், சமணர் அறிவுறுத்திய நெறி பொய்யென்று உணர்ந்து பாடலிபுத்திர த்தி லிருந்த பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தகர்த்து அவற்றிலுள்ள கற்களேக் கொணர்ந்து திருவதிகை யிலே சிவபெருமானுக்குக் குணதர வீச்சரம்” என் னுந் திருக்கோயிலே அமைத்து இறைவனே வழிபட் உனன் எனப் பெரிய புராணம் கூறும். இங்ங்ணம் முன்பு சமனர் சொற்கேட்டுத் திருநாவுக்கரசருக்குப் பலவகை இன்னல்களே ச் செய்து, பின்பு அவரது பெருமையுணர்ந்து அவர் திருவடிகளைப் பணிந்து சைவகிைய பல்லவ மன்னன், கி. பி. 600 முதல் 625 வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு