பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 愛?。

தொண்டை நாட்டை ஆட்சி புரிந்த பெருவேந்தருகிய மகேந்திர வர்ம பல்லவனே யென்பது வரலாற்ருராய்ச்சி யாளர் துணியாகும்

சூலக்குறி இடமிக்குறி பொறிக்கப் பெறுதல்

திருவதிகையில் திருவீரட்டானத்திறைவர்க்குத் தொண்டு புரிந்திருந்த திருநாவுக்கரசர், சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட விரும்பிஞர். திருவதிகையிலிருந்து புறப்பட்டுத் திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்துார், திருக் கோவலூர் முதலிய தலங்களை வணங்கித் திரும் பெண்ணுகடத்தையடைந்தார். அங்குத் துங்கானே மாடம் என்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தொழுது எம்பெருமானே, புன் மை மிக்க நெறியாகிய சமண சமயத்தில் தொடக்குண்டு வருந்திய இவ்வுடம்புடனே இனி உயிர்வாழ்ந்திருக்கத் தரியேன். அடியேன் இவ்வுடம்பினைப் பொறுத்திருப் பதற்கு இசைவாக நின்னுடைய சூலமும் இடபமும் ஆகிய இலச்சினையை என் மேற் பொறித்தருள வேண்டும் என விண் ண ப் பித்துக் கொள்ளும் முறையில்,

பொன்னுர் திருவடிக் கொன்துண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என் குவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகை மின்ஞரு மூவிலேச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னர் கடந்தையுள் தூங்கானே மாடச் சுடர்க்கொழுந்தே.

கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலேயுற்ருன் படவுந் திருவிர லொன்று வைத் தாய்பணி மால்வரைபோல் இடவம் பொறித்தொன்னே யேன்றுகொள் ளாயிருஞ்

சோலேதிங்கள் தடவுங் கடந்தையுள் தூங்கானே மாடத்தெந் தத்துவனே.

என வரும் திருவிருத்தமாகிய திருப்பதிகத்தைப்பாடிப் போற்றினர். அப்பொழுது இறைவனருளால் ஒரு சிவபூதம், பக்கத்திலுள்ளார் யாரும் அறியாதபடி