பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை 5

உயர்த்துவன ; உடம்பையும், கருவி கரணங்களேயும் நன்முறையிற் பயிற்றி இம்மை வாழ்விற்குப் பெரிதும் துணை செய்வன.

காலம் இடம் முதலியவற்ருற் கட்டுண்டு கிடக்கும் ம க் க ள த றி வு, ஐம்பொறியளவிற்பட்ட ஒரொரு பொருளேயே உய்த்துணர்ந்து அறிவது. இவ்வுலகி லுள்ள எல்லாப் பொருள்களேயும் உள்ளவாறறியும் ஆற்றல் அதற்கில்லை. நாம் வாழும் இவ்வண்டப்பகுதி யினையும் இதற்கு அப்பாற்பட்ட பேரண்டங்களேயும் இவையெல்லாவற்றிற்கும் ஆதாரமாய் எங்கும் நீக்க மற நிறைந்து உயிர்க்குயிராய் இயக்கி நிற்கும் முழுமுதற் பொருளாகிய இறைவனே யும் மக்கள் தமது அறிவொன் றையே துணையாகக் கொண்டு அறிதலென்பது இயலாத செயலாம். இவ்வுலகத்தியல்பினேயும் எவ் வுயிர்க்கும் உயிராக எங்கும் நீக்கமற விளங்கும் இறை நிலையையும் உள்ளவாறுணர்த்தும் பேரறிவு, பொருள் தோறும் கலந்து விளங்கும் இறைவைெருவனுக்கே யுரியதாகும். முற்றறிவுடைய இறைவன், அருளே திருமேனியாகக் கொண்டு தோன்றி அன்பர்க்கு அருளிச் செய்தனவும் தனது திருவருட்டுனையால் ஐம்புலன்களே வென்று முனைப்பின் றித் தன் னே வழிபாடு செய்யும் செம்புலச் செல்வர்களாகிய பெரி யோர்களின் உள்ளத்து எழுந்தருளியிருந்து அவர்கள் வாயிலாக வெளிப்படுத்தியருளினவும் ஆகிய மெய்ந் நூல்களே அறிவனுால்களாம். உடலுக்கு உறுதிதரும் உலக நூல்களைக் காட்டிலும் உயிர்க்குறுதி தரும் இம்மெய்ந் நூல்கள் மிகவும் சிறந்தனவாகும். சைவ சமயத்தவராற் போற்றிப் பயிலப்பெறும் பன்னிரு திரு முறைகளும் மேற்குறித்தவாறு இறைவன் திருவருளால் வெளிப்படுத்தப்பெற்ற சிறப்புடைய மெய்ந்நூல்களாத லின், இவற்றை அறிவனுரல் எனக்கொண்டு போற்று தல் பொருத்தமுடையதாகும்.

"உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி, உயிர் ஆவணஞ் செய்திட்டு