பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 2 : 3

ஞலே இப்பிறப்பிலேயே இடர்களேயெல்லாம் வென்று உய்யலாம் என்னும் உண்மையை என்னே ப்போன்ற எளியோர்களும் தெளிந்து உய்யும் வண்ணம் சிவத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசரது திருப்பெயரை யான் எழுத, நீர் இக்கொடுஞ்சொல்லே யான் கேட்கும் படி கூறினிர். அலேகள் பொங்கும் கருங்கடலிலே கல்லேயே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அவரு டைய பெருமையை இவ்வுலகில் அறியாதார் யாருளர்? மங்கலமாம் சிவவேடத்துடன் நின்று இவ்வார்த்தை பேசினரீர். நீர் எங்குறைவீச்? நீர் தாம் யார்? கூறும்' என வெகுண்டுரைத்தார். இவ்வாறு சினமுற்ற அப் பூதியாரது அன்பின் திறத்தையறிந்த திருநாவுக்கரசர் 'புறச்சமயத்தினின்றும் ஏறும் பொருட்டு இறைவன் சூலே நோயினத் தந்து ஆட்கொள்ள அடைந்து உய்ந்த தெளிந்த உணர்வில்லாத சிறுமையேன் யான்’ என மொழிந்தார். அவ்வுரை கேட்ட அப்பூதியடிகள் தம்முடைய குலதெய்வமாகிய திரு நாவுக்கரசரே இங்கு எழுந்தருளினரெனத் தெளிந்து பெருமகிழ்ச்சியுற்றர். மனே வி மக்கள் முதலிய சுற்றத்தாருடன் திருநாவுக் கர சர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தம் இல்லத் தில் திரு.அமுது செய்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்பரும் அவருடைய பேரன்புக்கு இசைந்தருளிர்ை.

அப்பூதியார் விருப்பின் வண்ணம் அவருடைய மனேவியார் , அறுவகைச் சுவையும் அமையத் தூய நற்க றிகளாக்கி இனிய திருவமுது சமைத்தார். நாவுக் கரசர் அமுது செய்தருளத் தோட்ட த்திற் சென்று வாழைக் குருத்தை அரிந்துவரும்படி தம்புதல்வன் மூத்த திருநாவுக்கரசினே அனுட்பினர். அவனும் ‘நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப்பெற் றேன்' என்னும் உவகையுடன் விரைந்துசென்று மனப் படப்பையிற் புகுந்து வாழைக் குருத்தை அரிந்தான்.