பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 2 * *

வாய்ந்த ஊரின் கண்ணே எழுந்தருளியுள்ளான். அவன் தானே வாராகுயினும் யானே அவ்வூர்க்குச் சென்று அவனேக் கண்டு மகிழ்வேன் எனக்கருதிய தலைமகள், திருப்பழன த்தை யடைந்து இறைவன் முன்னிலேயில் நின்று, பாவங்கள் அஞ்சியகன்று அழியும் வண்ணம் நல்ல வேள்விகளே யியற்றும் மேதகவுடைய அப்பூதி யடிகளது திருமுடியின் கண்ணே அணியப்பெற்ற தாமரை மலராக விளங்கும் செம்மையான திருவடி களே யுடைய பெருமானே, எளியேனை ஏற்றுக்கொள் வாயாக’ என வேண்டியிறைஞ்சும் முறையில் இத் திருப்பாடல் அமைந்துளது. இதல்ை திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் பால் வைத்த பெருமதிப்பு இனிது புல ணுதல் காணலாம்.

இவ்வாறு திருநாவுக்கரசரின் திருவடியே பெருஞ் செல்வமெனக் கொண்டு, அவருடைய திருப்பெயரால் தண் ணிர்ப்பந்தல் முதலிய பல நல்லறங்களேச் செய்து, ஆண்ட அரசர் பாடியருளிய திருப்பதிகத்திலே இறை வனுக்கு உறவினராம் நிலேயில் அப்பூதியென்னும் தன் பெயரிடப்பெற்ற சால்புமிக்க அந்தணர் . திங்க ளுரில் வாழ்ந்த அப்பூதியடிகள் என்பதனே,

தனமாவது திரு நாவுக்கரசின் சரன மென்ன மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்ட

மிழ்க்கே இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள் பிரான் அனமார் வயற்திங்க ளுரினில் வேதியன் அப்பூதியே. என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பி யாண்டார் நம்பி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரூர்ப்பெருமானே வழிபடுதல் திருப்பழனத்திறைவரைப் பணிந்து பரவிப்போற்

றிய திருநாவுக்கரசர், அவ்வூரிற் பல நாள் தங்கி யிேருந்து மன மொழி மெய்களால் திருத்தொண்டு செய்து