பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு

இத்திருப்பதிகத்தை அப்பரடிகள் திருவாய்மலர்ந் இருளக் கேட்டு ம கி ழ் ந் த திருஞானசம்பந்தர், திருவாரூர்ப் பெருமானே இறைஞ்சி மகிழும் பெருவிருப் புடைய ர | ய்த் திருவாரூர் கும்பிட்டு இங்கு வந்து உம்மொடும் உடன மர்வேன்? என அப்பமூர்த்திக்குச் சொல்லி அவர் பால் விடைபெற்றுச் .ெ சன் ரு ர் . திருவாவுக்கரசர் திருப்புகலூரை யடைந்து சிவ பெருமானப் பணிந்து தமிழ்மாலேகள் சாத்திக் கைத் திருத்தொண்டு செய்திருந்தார். அங்குறையும் நாட் களில் செங்காட்டங்குடி, நள்ளாறு, சாத்தமங்கை, மருகல் ஆகிய திருத்தலங்களே யிறைஞ்சி மீண்டார். இந்நிலையில் ஆளுடைய பிள்ளேயார் திருவாரூர்ப் பெரு மானை யிறைஞ்சி மகிழ்ந்து பல தலங்களே வணங்கித் தம் கெழுதகை நண்பர் திருநாவுக்கரசரை நினேந்து திருப்புகலூர் வந்தடைந்தார். அப்பரடிகள் பிள்ளே யானை எதிர்கொண்டு அழைத்து வந்து முருகதாயஞர் திருமடத்தில் அவருடன் அளவளாவி அமர்ந்திருந்தார். அப்பொழுது சீறுத்தொண்டர் நீல நக்கர் ஆகிய அடியார்கள் அங்குவந்து அப்பெருமக்களே வணங்கி மகிழ்ந்தனர்.

திருஞான சம்பந்தருடன் தலயாத்திரை

சிலநாட் .ெ ச ன் ற பின் திருநாவுக்கரசரும் ஆளுடைய பிள்ளையாரும் திருப்புகலூரினின்றும் புறப் பட்டுத் திருநீதைக்கர், சிறுத்தொண்டர், முருக நாயனர் முதலிய அடியார்கள் விடைபெற்றே கத் திருஅம்பர் என்னுந் திருப்பதியை இறைஞ்சிப் போற்றினர்கள். திருக்கடவூர் சென்று மார்க்கண்டரென்னும் அடியவர் பொருட்டுக் காலனேயு ைதத்த கடவுளேப் பணிந்து குங்கிலியக்கலய நாயன ரால் உப ச ரி க் கப் .ெ ப ற் று அவருடைய திருமடத்திலே அமுது செய்தருளினர்கள். பின்பு திருக்கடவூர்த் திருமயானம், ஆ க் கூ ர் த் தான்ருேன்றிமாடம் முதலிய தலங்களைப் பணிந்து