பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பன்னிரு திருமுறை வரலாறு


உன் கைத் தந்தார் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி” என்ற வண்ணம் இறைவனே இடைவிடாது நினைந்து அப்பெருமானது பேரறிவே தம்பால் விளங்கப்பெற்றுத் தம் முனர்வென்பது சிறிதுமின்றி இறைவனது பேரறி வினுள் அடங்கி நின்ற சிவஞானிகளாக விளங்கிய வர்களே திருஞானசம்பந்தப்பிள்ளேயார், திருநாவுக் கரசர், சுந்தரர் முதலிய அருளாசிரியராவர். அவர்கள் வாயிலாகச் சிவபெருமானே வெளிப்படுத்தியருளிய சிறப்புடையன. சைவத் தி ரு மு ைற க ள கு ம். இச்செய்தி " எனதுரை தனதுரையாக ' எனத் திரு ஞானசம்பந்தப்பிள்ளையாரும், ' பன்னிய செந்தமிழ் மாலே பாடுவித்தென், சிந்தை மயக்கறுத்த திருவருளி ேைன ” எனத் திருநாவுக்கரசடிகளாரும் கூறும் வாய் மொழிகளாலும், சிவபெருமானே நம்பியாரூரர்க்கும் * பித்தா எனவும் " தில்லே வ | ழ ந் த ண ர் த ம் அடியார்க்கும் அடியேன் ” எனவும் அடியெடுத்துக் கொடுத்தும் சேக்கிழார் நாயனருக்கு உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுத்தும் வெளிப்படுத்தி யருளிய சிறப்புடைய நிகழ்ச்சிகளாலும் நன்குணரப் படும். பதினெராந் திருமுறையிலுள்ள திருமுகப் பாசுரம், மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானடிகளாகிய சிவபெருமா ேைலயே திருவாய் மலர்ந்தருளப்பெற்ற சிறப்புடை யது. தெய்வத் தமிழ் நூல்களாகிய இத் திருமுறைகளே இறைவல்ை அருளிச் செய்யப்பட்ட வேத சிவாக மங்களைப் போன்று இறைவனருளிய மறைகளாகவே கொண்டு போற்றிப் பயிலுதல் வேண்டுமென்பது முன்னேர் துணிபு. இறைவன் அருளிச்செய்தனவாகப் பாராட்டப்படும் வேதங்களே எழுதாக்கிளவி எனவும், இறைவனது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தப் பிள்ளே யார் முதலிய பெருமக்கள் இனிய தமிழாற் பாடியருளிய இத் திருமுறைகளே எ ழு து மறை எனவும் வழங்குதல் மரபு. வண்டமிழால் எழுது மறை மொழிந்த பிரான் ” எனப் பெரிய புராணமும், * எழுதுமறை மொழிந்த கழுமல முனிவன் ” எனத்