பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 223

வட்டமின்றி வணிகர்களால் ஏற்றுக்கொள்ளப் பெற் றது. அதல்ை அவருடைய திருமடத்தில் நாள் தோறும் உரிய காலத்தில் அடியார்கள் திருவமுது செய்தார்கள். திருஞான சம்பந்தர் இறைவனுக்குத் திருமகனுராத லின் அவர் பெறும் காசு வணிகர்கள் பால் வட்டங் கொடுத்து மாற்றவேண்டியிருந்தது. அதுகொண்டு உணவுப் பொருள்களே வாங்கக் காலந் தாழ்த்தமை யால் ஞான சம்பந்தர் திருமடத்தில் அடியார்கள் காலந் தாழ்த்து அமுது செய்யவேண்டிய நிலைமை யேற்பட் டது. அதனே யுணர்ந்த காழிப்பிள்ளேயார், விழிமிழலைப் பெருமானே யிறைஞ்சி வாசிதீரவே காசு நல்குவீர்” என வேண்டி வாசியில்லாக் காசு பெற்று அடியார்களே உரிய காலத்தில் திருவமுது செய்வித்தருளினர் . பின் னர் காங்கும் மழைபெய்து உணவுப் பொருள்கள் நிறைய விளேந்தமையால் பஞ்சம் நீங்கியது என்ற செய்தி முன்னர் விளக்கப் பெற்றது.

மறைக் கதவ ந் திறக்கப்படுதல்

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருவீழி மிழலேயினின்றும் புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய திருத்தலங்களே இறைஞ்சிப் போற்றித் திருமறைக் காட்டை அடைந்து திருக்கோயிலே வலம் வந்து, பண்டை நாளில் வேதங்கள் இறைவனே வழிபட்டு அடைந்த திருக்க தவ ைமந்த திருவாயிலே அடைந்தார் கள், முன்ளிைல் வேதங்களால் அடைக்கப்பட்ட திருக் கதவு, வேதங்களில் வல்ல அன்பரொருவரும் வாராமை யால் நெடுநாள் திறக்கப்படாதிருந்தது. அதல்ை அவ் ஆரவர் வேருெருவாயிலமைத்து வேதனை ப் பெருமானே வழிபட்டு வந்தனர் இச் செய்தியை உணர்ந்த திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரச ை நோக்கி அப்பரே, நாம் எப்படியும் நேர்முகமாகவுள்ள இத் திருவாயிலின் வழியே சென்று மறைக்காட்டிறைவரை வழிபடுதல்