பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

பன்னிரு திருமுறை வரலாறு


வேண்டும். ஆதலால் இத்திருக்கதவு திறக்கும்படி நீவிர் திருப்பதிகம் பாடியருளும் என வேண்டினர், அன்புடைய பிள்ளே யாரது விருப்பத்திற்கிசைந்த திரு நாவுககாசா,

பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ மண்ணி குர்வலஞ் செய்மறைக் காடரோ கண்ணி குலுமைக் காணக் கதவினத்

திண்னமாகத் திறந்தருள் செய்ம்மினே.

என்ற திருப்பதிகத்தைப் பாடினர். செந்தமிழ்ப்பாடல் களாகிய அவற்றின் சுவை நலங்களைத் துய்க்கவிரும் பிய மறைக்காட்டீசர், திருக்கதவு திருக்காப்பு நீக்கக் காலந் தாழ்த்தருளினர். தம் வேண்டுகோட்கிரங்கி இறைவனே திருக்கதவு திறந்தருளாமை கண்டு வருத்த முற்ற நாவுக்கரசர், இராவணனே விரலால் அடர்த் திட்ட நீவிர் ஒரு சிறிதும் இரக்கமுடையீரல்வீர்” என இறைவனை நோக்கிப் பிணங்கிப் பேசும் முறையில்,

அரக்கனே விரலால் அடர்த்திட்ட நீர் இரக்க மொன்றிலீர் எம்பெருமானிரே சுரக்கும் புன்னேகள் சூழ்ம றைக் காடரோ

சரக்க விக்கதவத் திறப்பிம்மினே.

என அத்திருப்பதிகத்தின் இறுதித் திருப்பாட்டினேப் பாடத் தொடங்கினர், அந்நிலையில், பன்னெடு நாட் களாக அடைக்கப்பட்டிருந்த திருக்கதவு இறைவனரு ளால் திறக்கப்பெற்றது. அப்பொழுது ஆளுடைய பிள்ளையாரும் அப்பரடிகளும் நிலமிசை வீழ்ந்திறைஞ்சி நேர்முகவாயில் வழியே கோயிலுட் புகுந்து மறைக் காட்டிசரை வணங்கி வண்தமிழ் மாலேகள் பாடிப் போற்றிப் புறம் போந்தனர். அப்பொழுது நாவுக்கரசர் ஞானசம்பந்தரை ந்ோக்கி ‘இறைவன் திருவருளால் திருக்கதவு நாடொறும் திறக்கப்பெற்றும் அடைக்கப்