பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

பன்னிரு திருமுறை வரலாறு


மனங் கலங்கிய திருநாவுக்கரசர், இறைவர் நம்முன் தோன்றி வாய்மூருக்கு வா என அழைத்து வந்ததும் பொய்யோ என ஐயுற்றனர் என்பது,

மாதே வாகிய வாய்மூர் மருவினர் போதே யென்று புகுந்ததும் பொய்கொலோ ?

எனவரும் அவரது வாய்மொழியாற் புலம்ை. வாய்மூர்ப் பெருமானேக் காணுது வழியிடையே வருந்திய அப்ப சடிகள், தம்முடைய அரும் பெறல் நண்பராகிய திருஞானசம்பந்தர் தம்மை அன்பினல் தேடிவருதலைச் சேய்மையிற் கண்டு, விழிமிழலே யிறைவரைப்பாடி வாசிதீரக் காசு பெற்ற அப்பெருந்தகையார் என்பால் வைத்த பேரன்பினுல் இப்பொழுது என்னைத் தேடிவரு தல் போன்று வாய்மூர் இறைவரும் என்மேல் வைத்த பெருங்கருணையால் என்னே த் தேடிவந்து திருவாய் மூர்க்கு வருவாயாக என்று சொல்லி வழியில் ஒளித்த தும் முறையாமோ என ஆளுடைய பிள்ளையாரது பேரன்பின் திறத்தையும் வாய்மூரிறைவரது அருட் செயலேயும் நினைந்துருகினரென்பது,

பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டந் தவிர்ப்பார் அவரைப்போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெஞ. ஒடிப் போத்திங் கொளித்தவா றென்கொலோ,

என அவர் அப்பொழுது பாடியருளிய திருப்பாடலால் இனிது விளங்கும். இதன் கண் ஞான சம்பந்தப் பிள் ளே யார் தம்மைத் தேடிவந்த அன்பின் செயலே, தம்மைத் திருமறைக்காட்டில் அழைக்கவந்த வாய்மூரிறைவரது அருட்செயலுக்கு நாவுக்கரசர் உவமையாக எடுத்துக் காட்டிய அன்பின் திறம் நினேந்து மகிழத்தக்கதாகும்

இறைவரை மனத்தின் கண் எண்ணி யான் உறங்கிய நிலேயில் அவர் என்னத் தேடி வந்ததைக் காட்டிலும் யான் ஞான சம்பந்தரை நினே யாது வந்த இந்நிலையிலே அன்புடை நண்பராகிய அவர் என்னத் தேடிவருகின்ற