பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 233

தருளின ன் என்று இவ்வாறு திருநாவுக்கரசர் தம் நெஞ்சிற் கவலேயும் அச்சமும் உடையவராய்ப் பின் வாய்மூரிறைவர் திருவருளால் அக்கவலே தீர்ந்து மகிழ்ச்சியுற்றன. ரென்பது, அவர் வாய்மூர்ப் பெரு மானே த் தொடர்ந்து சென்று பாடிய திருக் குறுந் தொகைப் பதிகத்தில்,

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப்பாடி அடைப்பித்தார் உந்நின் ருர்’ எனவும்,

  • தனக்கேருமை தவிர்க்கென்று வேண்டினும்

நினேத்தேன் பொய்க்கருள் செய்திடும் நின்மலன் ’ எனவும் தம்மைப்பற்றிக் கூறுந் தொடர்களால் நன்கு உய்த்துணரப்படும்.

அப்பரும் ஞானசம்பந்தரும் திருவாய்மூரிறைவரை வணங்கி விடைபெற்றுத் திருமறைக் காட்டில் எழுந் தருளியிருந்தார்கள். அப்பொழுது மதுரையிலிருந்த பாண்டிமா தேவியார் மங்கையர்க்கரசியாரும் அமைச் சர் குலச் சிறையாரும் அனுப்பிய தூதர்கள், திருமறைக் காட்டினே ய ைட ந் து ஞான சம்பந்தரைக் கண்டு வணங்கி நின்று, பாண்டிய நாட்டிற் சமணர்கள் சைவர் களுக்குச் செய்யும் இடையூறுகள் பொறுக்கத் தக்கன அல்ல என்பதை எடுத்துரைத்தார்கள். அது கேட்ட ஞான சம்பந்தர், தென்னுட்டிற் சமணர்கள் செய்யும் தீமைகளே நீக்கிச் சிவநெறியை நிலே நிறுத்தத் திரு வுளங்கொண்டு திருவருள் வண்ணமாகிய திருநீற்றினே நினேந்து பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டருளினர். அப்பொழுது அப்பரடிகள், ஆளுடைய பிள்ளையாரை நோக்கி, பிள்ளாய், அமணர்கள் செய்யும் வஞ்சனேக்கு ஒர் எல்லேயில்லே, மாயத்தில் வல்லவராகிய அவர்கள் எனக்குச் செய்த தீங்கு பலவாகும். அன்றியும் இப் பொழுது கோள்களும் தீயன வாக உள்ளன. ஆதலால் இந்நிலையில் மதுரைக்கு எழுந்தருள உடன்படுதல் பெருந்தாது எனத் தடுத்தருளினர். அது கேட்ட