பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

பன்னிரு திருமுறை வரலாறு


தார். அங்குறையும் நாளில் திருமாற்பேறு என்னுந் தலத்தை அடைந்து இறைவனே யிறைஞ்சிக் காஞ்சி யில் வைத்த காதலால் ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என முடியும் திருத்தாண்ட கத்தினைப் பாடிக்கொண்டு திருக்கச்சி யே கம்பத்தைக் கண்டு’ பணிந்தார். பின் பல தலங்களையும் பணிய விரும்பித் திருக்கழுக்குன்று, திருவான்மியூர், மயிலாப்பூர், திரு வெற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு, திருக்காரி கரை என்னுந் தலங்களே இறைஞ்சிப் போற்றித் தொண்டர்கள் புடைசூழ த திருக்காளத்தி மலேயை அடைந்தார். பொன் முகலித் திருநதியாகிய தூய தீர்த்தத்தில் மூழ்கித் திருக்காளத்திமலையின் அடி வாரத்திற் சென்று வீழ்ந்திறைஞ்சி மலையின் மேல் ஏறிக் குடுமித்தேவரைக் கும்பிட்டு, நாதனே என் கண் னுள்ளான்” எனப்போற்றும் திருத்தாண்டகத்தினப் பாடிப் பரவினர். காளத்தி மலேமீது இறைவனருகே நின்றருளும் அன்புருவாகிய கண்ணப்பநாயனருடைய திருவடிகளே யிறைஞ்சித் தலைமீது குவித்த கையின ராய்க் கண்ணிர் சொரியப் பணிந்து புறம் போந்து அம் மலே மேல் திருப்பணிகள் செய்து மகிழ்ந்தார். தென் கயிலே எனப் போற்றப்பெறுந் திருக்காளத்தி மல் மேல் இறைவனப் பணிந்த குறிப்பினல் வடதிசையில் உள்ள திருக்கயிலாய மலையில் விந்றிருந்தருளும் இறை வனது திருக்கோலத்தினேக் காண வேண்டுமென்னும் பெருவிருப்பம் திருநாவுக்கரசர்க்கு உண்டாயிந்று.

திருக்கயிலாய யாத்திரை கயிலேக்கோலங் காண விழைந்த திருநாவுக்கரசர், காளத்திநாதரை வணங்கிப் போற்றி மலே, காடு, ஆறு, நாடு என்பவற்றைக் கடந்து திருப்பருப்பதத்தை யடைந்து இறைவனேச் சொன் மாலேகளால் துதித்தார். பின் தெலுங்கு கன்னட நாடுகளைக் கடந்து, காடு நதி மலே என்பன நெருங்கியுள்ள ந்ாடுகள் பிற்பட மாளவ