பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 24

தேயத்தை யடைந்தார், அங்கிருந்து வெம்மை மிக்க வழியாகிய சுரங்களேக் கடந்து இலாடம், பைதிரம் ஆகிய தேசங்களே நீங்கிக் கங்கையாறு வளஞ்சுரக்கும் காசிப்பதியினே அடைந்தார். வாரணுசியாகிய அத் திருப்பதியில் எழுந்தருளிய முழுமுதற் கடவுளே பிறைஞ்சித் தாமுடன் , த அடியார்களே அங்கே தங் கும்படி பணித்தார். தாம் அதற்கப்பாலுள்ள கற்சுரத் திலும் மனிதர்கள் சென்றறியாத வானுற வோங்கிய காடுகளிலும் இலே, கிழங்கு, கனி முதலியவற்றை யுண் பதனையும் தவிர்ந்து இரவு பகலாக இடைவிடாது நடந்து சென்ருர், அதனுல் அவருடைய பாதங்கள் பரட்டளவும் தேய்ந்தன. அங்ங்ணம் தேய்ந்தும் திருக் கயிலாய மலேயிற் பெருமானேக் காண வேண்டுமென் னும் பேரார்வத்தால் தம்முடைய இரண்டு கைகளேயும் ஆதரவாகக் கொண்டு தாவிச் சென் ருர் . அந்நிலையிற் கைகளின் மணிக்கட்டுக்களும் கரைந்து சிதைந் தன. மேலும் ஆர்வம் மிகுதலால் பருக்கைக் கற்கள் நிரம்பிய அவ்வழியில் மார்பின ல் நகர்ந்து சென் ருர், மார்பும் தசை தைந்து சிந்த எலும்புகளும் முரிவன வாயின. பின் புரண்டு புரண்டு போயினர். அதனுல் உடம்பு முழு தும் சிதைத்து தேய்ந்திடவும் அப்பரடிகளது உள்ளம் திருக்க யிலேயினே க் காண வேண்டுமென் னும் உறுதி யிற் சிறிதும் குறைந்திலது. அவ்வுறுதியினுல் மெல்ல நகர் தற்கு முயன்றும் அது கூடாமையால் சொல்வேந்த ராகிய அப்பரடிகள் அவ்வழியிலே செயலற்றுத் தங்கி ஞர்.

அப்பொழுது சிவபெருமான், திருநாவுக்கரசரை மீளவும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி உலகெலாம் உய்ய நிலைபெற்ற இனிய செந்தமிழ்த் திருப்பாடல்களேப் பாடு வித் தற்கும் கயிலேக் கோலத்தைக் கண்டு மகிழ வேண்டுமென்ற ஆளுடைய அரசரது விருப்பத்தை இனிது நிறைவேற்றுதற்கும் திருவுளங்கொண்டு, அவ்