பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

பன்னிரு திருமுறை வரலாறு


விடத்தில் ஒரு தடாகத்தை உண்டாக்கி வற்கலே யாடையும் சடைமுடியுமுடைய முனிவர் வடிவத் துடன் அவர்க்கு முன் வந்து நின்று, நீர் நும்முடைய உடம்பின் அங்கங்களெல்லாம் சிதைந் தழிய இக் கொடிய வெம்மை மிகுந்த காட்டில் எ தன் பொருட்டு வந்தீர்' என வினவிஞர். திருநீறணிந்த முனிவராகிய அவரைக் கண்டு அவர் கூறும் இன்னு ை களேச் செவி மடுத்த நிலேயில் அப்பரடிகளுக்கு உடம்பின் சிதை வாலுண்டாகிய சோர்வு ஒருவாறு நீங்கியது. பேசு தற்குரிய உணர்வு சிறிது உண்டாயிற்று. தாவுக்கரசர் முனிவ ை நோக்கி முனிவர் பெருமானே, வடகயிலே வில் அண்டர் நாயகனுகிய சிவபெருமான் உமையம்மை யாருடன் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தை அவர்க்கு அடியவனுகிய யான் கண்ணுரக் கண்டு கும்பிட வேண்டுமென் னும் விருப்புடன் வந்தேன்? எனக் கூறினர். அது கேட்ட முனிவர் திருக்கயிலாய மலே யென்பது தேவர்களாலும் அணுகு தற்கரியது; நிலவுலகில் வாழும் மனிதர்களால் அடைதற்குரிய வரி மையுடையதன்று. நீவிச் வெம்மை மிக்க இக்கொடுஞ் சுரத்திலே வந்து என் செய் தீர், இங்கிருந்து மீண்டு போதலே நும்மாற் செய்யத்தக்கது என மொழிந்தார்.

இங்ங்னம் முனிவர் மொழியக்கேட்ட அப்பரடிகள், “ஆளும் நாயகனுகிய எம்பெருமான் திருக்கயிலாய மலையில் வீற்றிருக்குந் திருக்கோலத்தைக் கண்டு வணங்கியல்லது மாளும் இயல்பினதாகிய இவ்வுடம் பைக் கொண்டு இனி மீளேன்’ என மறுத்துரைத் தார். அந்நிலேயில் முனிவராய் வந்த சிவபெருமான் அரசரது உள்ள த்தின் உறுதியை யறிந்து விண்ணிலே மறைந்து நின்று ஒங்கு நாவினுக்கரசனே எழுந்திரு' என உரைத் தருளினர். உடனே அப்பரடிகள் அழிந்த உடலுறுப்பெல்லாம் முன்போல நிரம்பப்பெற்றுத் தீங்கு நீங்கி யெழில்பெற்ற திருமேனியுடன் எழுந்து