பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பன்னிரு திருமுறை வரலாறு


ஆசிரியர்களே ஆவர். " ஆறதேறுஞ் சடையான் அருள் மேவ அவனியர்க்கு, வீறதேறுந் தமிழால் வழி கண்டவன்’ எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பாராட்டிய நம்பியாண்டார் நம்பி, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருப்பதிக வாயிலாக உலகினர்க்கு அறி வுறுத்திய சமய நெறியினைப் பதிகப் பெருவழி யெனச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். முழு முதற் கடவு ளாகிய சிவபெருமானது பெருஞ் சீர்த்தியும் அப் பெரு மான் தன்னடியார்க்கு அருள் வழங்குந் திறமும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகையாக நிகழும் திருத் தொண்டுகளின் இயல்பும், எல்லா வுயிர்களையும் உய்வித்தல் கருதி உடல், கருவி, உலகு, நுகர் பொருள் என்பவற்றின் உருவாக இறைவனுற் படைத்தளிக்கப் பெறும் இவ்வுலகியற் பொருள்களின் எழில் நலங்களும் ஆகிய பல்வகைப் பொருள்களையும் தொகுத்துரைப் பன இத் திருப்பாடல்களாதலின் இவை பதிகம் எனப் பெயர் பெறுவன ஆயின.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், தாம் சொல்லக் கருதிய ஒவ்வொரு பொருளையும் பத்துப் பத்துக் குறட் பாக்களால் விளக்கினுற்போன்று தேவார ஆசிரியர் க ளும் பத்துப் பாடல்களேக் கொண்டது ஒரு திருப் பதிக மாக அருளிச் செய்துள்ளார்கள். திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் பதினெரு பாடல்களைக் கொண்டனவாயினும் அவற்றின் இறுதிதோறும் உள்ள பதினெராம் பாடல்களாகிய திருப்பாடல்கள், அவ்வப் பதிகங்கள் பாடப்பெற்ற செவ்வியையும் அவற்றின் பொருள் நலங்களையும் அவற்றைப் பாடிய ஆசிரியரது பெருமையினேயும் அப்பதிகங்களைப் பொருளுணர்ந்து பயின்று ஓதி இறைவனே வழிபடுவோர் எய்தும் பெரும் பயன்களையும் விளங்கவுரைக்கும் பாயிரம் போன்று அமைந்தனவாதலின், அவ்வப்பதிகத்தின் இறுதிப் பாடல்களைப் பதிகத்தின் வேருகத் திருக்கடைக்காப்பு என்ற பெயரால் வழங்குவர் சேக்கிழார். திருநாவுக் கரசர் பாடிய திருப்பதிகங்களிற் பெரும்பாலன, பத்துப்