பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 24?

திருமடம் ஒன்றைக் கட்டுவித்து இறைவனே வழிபட் டிருந்தார். அந்நாட்களில் பலவகைத் தாண்டகம், பரவு தனித் தாண்டகம், அடைவு திருத்தாண்டகம், திருவங்கமாலே முதலிய செந்தமிழ்ச் செ ல் மலர்களா ந் சிவபெருமானே அருச்சித்துப் போற்றி மகிழ்ந்தார்.

திருநாவுக் கரசர் இங்ங்ணமிருக்க, திருமறைக்காட் டி லிருந்து இவர்பால் விடைபெற்றுச் சென்ற திருஞான சம்பந்தப் பிள்ளேயார், பாண்டிய நாட்டின் தலை நக ராகிய மதுரையை அடைந்து சமணர்களே வாதில் வென்று பாண்டியனது கூனே நிமிர்த்தருளித் தென்கு டெங்கும் திருநீற்றின் ஒளி பரப்பி அங்கிருந்து மீண்டு சோழ நாட்டுத் தலங்களே வணங்கி வருபவர், அன்பிற் சிறந்த நண்பராகிய அப்பரடிகளேக் காணும் விருப் புடன் அப்பர் எங்குற்ருர்’ என அடியார்களே வினவி குர். அப்பர் திருப்பூந்துருத்தியில் இருக்கின் ருர்’ என அடியார்கள் கூறினர்கள். அது கேட்ட பிள்ளே யார், அடியார் கூட்டத்துடன் புறப்பட்டுத் திருப்பூந் துருத்தியின் அருகே வந்தனேந்தார்.

ஞான சம்பந்தர் திருப்பூந்துருத்தியருகே வருதலேக் கேள்வியுற்ற நாவுக்கரசர், பிள்ளே யாரை எதிர் கொண்டு போற்ற விரும்பி முன்சென்று, தம்மை இன்னு ரென ஒருவரும் அறியாதபடி அடியார் கூட்டத்துட் புகுந்து. திருஞானசம்பந்தர் அமர்ந்துவரும் முத்துச் சிவிகையினே த் தாங்கிவந்தார். அப்பொழுது ஞான சம்பந்தர், அடியார்களே நோக்கி அப்பர் எங்குற்ருர்’ என வினவினர். பிள்ளே யாரது அன்பின் திறத்தைக் கண்டு நெஞ்சம் நெக்குருகிய அப்பரடிகள், உம் அடியேன் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு வந்தெய்தப் பெற்று இங்கு ற்றேன்’ என மொழிந்தார். அது கேட்ட ஞானசம்பந்தப் பிள்ளையார் அச்சமும் வியப்பு:மெய்திச் சிவிகையினின்றும் கீழே குதித்து