பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 249

தானே யெல்லார்க்கும் முன்னே தோன்றி எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தாற் பரவிப் போற்றினர் பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் அவ ருடைய கணவரும் வேந்தர் பெருமானுமாகிய நின்ற சீர் நெடுமாறனரும் மந்திரியார் குலச்சிறையாரும் திரு நாவுக்கரசரைக்கண்டு வணங்கி கால்லேயிலாப் பெரு மகிழ்ச்சியுடைய ராய்ப் பேரன்புடன் உபசரித்தார்கள். திருநாவுக்கரசர் அங்குச் சிலநாள் தங்கியிருந்து திரு. நேரிசை திருத்தாண்டகம் முதலிய செந்தமிழ் மலர் களால் திருவாலவாய்ப் பெருமானே அருச்சித்தும் போற்றிக் கைத்திருத்தொண்டு செய்து மகிழ்ந்தார்.

பின்பு திருநாவுக்கரசர் திருப்பூவணத்தைவழிபடச் சென்ருர், பூவணத்திறைவர் தமது தெய்வத் திருக் கோலத்துடன் திருநாவுக்க சர்க்கு எதிரே தோன் றிக் காட்சி தந்தருளினர். அவ்வழகிய தெய்வக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அப்பரடிகள்,

வடிவேறு திரிசூலம் தோன்று ந் தோன்றும்

வளர்ச்சடைமேல் இளமதியம் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்

காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்

எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்

பொழில் திகழும் பூவணத்தெம் புனிதகுர்க்கே.

என வரும் திருத்தண்டகத் திருப்பதிகத்தால் பூவணத் திறைவரை வழுத்திப் போற்றினர். பின்பு திருவிரா மேச்சரம், திருநெல்வேலி, திருக்கானப்பேர் முதலா கப் பாண்டி நாட்டிலுள்ள எல்லாத் தலங்களேயும் பணிந்து செந்தமிழ்ப் பதிகங்களாற் பரவிப் போற்றிச் சோழ நாடடைந்து பல தலங்களையும் பணிந்து போற் றித் திருப்புகலூரில் அமர்ந்திருந்தார்.