பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை 9

பாடல்களால் ஆகியவை. பாடினேர் பெயரும் பயன் முதலியனவுங்கூறும் திருக்கடைக்காப்புப் பாடல்களேத் திருநாவுக்கரசர் பாடும் வழக்கமுடையரல்லர். எனி னும் கயிலே மலேயிற் சிக்கிய இராவணன் தான் அறி யாமையாற் செய்த பெரும்பிழையைப் பொறுத்தருளும் படி சிவபெருமானே வேண்டி இசைபாடி உய்ந்த வர லாற்றைத் தம் பதிகங்களின் இறுதிப் பாடலாகிய பத் தாம் பாடலில் திருநாவுக்கரசர் குறித்துப் போற்றுதலே வழக்கமாகக் கொண்டாராதலின், இராவணனது பேறு குறிக்கும் பத்தாம் பாடல்களே அத்திருப்பதிகத்தைக் காதலாகி ஓதி இறைவனே வழிபடுவோர் எய்தும் பெரும் பயன்களேக் கூறுவனவாக அமைந்துள்ளன. சுந்தரர் தேவாரத்தில், திருஞான சம்பந்தர் திருப்பதிகங்களைப் போன்று திருக்கடைக் காப்புடன் சேர்த்துப் பதினுெரு பாடல்களால் இயன்றனவும், திருநாவுக்கரசர் திருப் பதிகங்களைப் போன்று பத்துப்பாடல்களால் இயன்று பத்தாம் பாடலே திருக்கடைக் காப்பாக அமைந்தன. வும் என இரு திறப் பதிகங்களும் காணப்படுகின்றன. தேவாரத் தி ரு ப் ப தி க ங் க ளே ஏட்டில் எழுதித் தொகுத்து முறைப்படுத்திய பின்புதான் அவற்றுக்குத் திருமுறையென்ற பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். ஆசிரியர் சேக்கிழார் இத்திருப்பதிகங்களைத் திருமுறை யென்ற பெயராற் குறித்துப் போற்றுதலே யெண்ணுங் கால் அவர்க்கு நெடுங் காலத்திற்கு முன்பே இத் தெய் வப் பாடல்கள் முறைப்படுத்தப் பெற்றிருந்தன வென் பது நன்கு புலம்ை.

திருமுறை கண்டது

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என வழங்கும் வழக்கம் பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத் தொண்டர் புராணம் இயற்றப்பெற்ற பின்னரே ஏற் பட்டதென்பது உமாபதி சிவாசாரியார் இயற்றிய சேக் கிழார் புராணத்தால் நன்கு துணியப்படும்.