பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 253

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

என வரும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக் கீழ் எய்தி இன் புற்ருர்.

இங்ங்னம் திருநாவுக்கரசராகிய பெருந்த கையார், திருப்புகலூரிறைவர் திருமுன் நின்று உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' எனத் தாண்டகச் செந்தமிழாற் போற்றிய நிலையி லேயே இவ்வுலக வாழ்வைத் துறந்து அறவாழி யந்தன னுகிய இறைவன் திருவடியைத் தலேக்கூடிய நன்குள் , சித்திரைத்திங்களிற் சதயத்திருநாள் எனப் பெரிய புராணம் கூறும்.