பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

பன்னிரு திருமுறை வரலாறு


மகளிர்பாற் சென்ற தம் மனத்தை மீட்டு இறைவனுக் கேற்ற தூயதன் மலர்களேக் கொய்து கொண்டு சிவபெரு மான் திருமுன்னர்ச் சென் ருர். அங்ங் னமே மகளிர் இருவரும் உமையம்மையார் அணிதற்குரிய நறுமலர் களேப் பறித்துக்கொண்டு சென்றனர்.

எல்லா வுயிர்களுக்கும் உயிர்க்குயிராய் உள் நின்று அருள் சுரக்கும் சிவபெருமான், ஆலாலசுந்தரரது உள் ளக் குறிப்பினே முன்னரே உணர்ந்தவராதலின் அவரை நோக்கி, நீ மாதர்மேல் மனம்வைத்தனே ஆத லால் தென்குட்டிலே பிறந்து மெல்லியலாராகிய அம் மகளிருடன் காதல் இன்பம் துய்த்து மீள் வாயாக’ எனப் பணித்தருளினர். அது கேட்டு உள்ளங்கலங்கிய ஆலாலசுந்த சர், கைகளேத் தலைமீது குவித்து இறை வனே இறைஞ்சி நின்று, எனது ஆருயிர்த்தலைவ குகிய ஐயனே, நின்னுடைய செந்தாமரை மலர் போலுந் திருவடிகளேப் பிரிந்து வருந்து தற்குக் காரண மாகிய காமத்தாற் சிறுமையுற்ற எளியேன், மயக் கத்தை விளே விக்கும் மனித்தப் பிறவியை யடைந்து பதிமயங்குங் க லத்து, ஆண்ட வகிைய நீ அடியேனே த் தடுத்து ஆட்கொண்டருளுதல் வேண்டும்' என வேண் டிக்கொண்டார். வேண்டுவார் வேண்டுவதே ஈந்தரு ளும் சிவபெருமானும் அவரது வேண்டுகோளுக்கு இசைந்தருளினர்.

இறைவன் திருவருளால் ஆலாலசுந்தரர், புண்ணி யத்தின் விளே நிலமாகத்திகழும் செந்தமிழ் நாட்டிலே திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவ லூரிலே மாதொரு பகர்ைக்கு வழிவழி யடிமைசெய் யும் ஆதிசைவ வேதியர் மரபிலே தோன்றிப் புகழால் மேம்பட்ட சடையனுர் என் பார்க்கு அவருடைய அருமைத் திரு மனைவியர் இசைஞானியார்பால் மக வாகத் திவவதாரஞ் செய்தருளினர். பெற்ருேர்கள்