பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு £59

திருநாவலூரைத் தலைநகராகக்கொண்டு திரு முனேப்பாடி நாட்டினே ஆட்சிபுரியும் நரசிங்கமுனே யரையர் என்னும் குறுநில மன்னர், ஆதிசைவ வேதியராகிய சடையனுர்பால் அவர் புதல்வர் நம்பி யாரூரரை அன்பினல் வேண்டிப் பெற்றுத் தம் அர சிளங்குமரகை ஆதரித்து வளர்த்து வந்தாரென்பது,

"நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்கமுனேயரையன்

ஆதரித் தீசனுக்காட் செயுமூ ரணி நாவலு ரென்

ருேத நற்றக்க வன்ருெண்டன் ஆரூரன்' என நம்பியாரூரர் தம்மைப்பற்றிக் கூறும் குறிப்பில்ை இனிது விளங்கும்.

இவ்வாறு பெருமைசால் அரசரது பேரன்புக்கு உரிய பிள்ளையாய் வளர்ந்த நம்பியாரூரர். தாம் பிறந்த அந்தணர் மரபுக்கேற்ப முந்நூலணிந்து மறைகள் நான்கும் ஆறங்கங்களும் முதலாகவுள்ள அளவற்ற கலை நூல்களேக் கற்றுத் தெளிந்தார். உளங்குளிர் தமி மூரன்’ அருங்குலத் தமிழுரன் நான்மறையங்கம் ஓதியநாவன்’ ‘மன்னுடலவன் வயல்நாவலர்கோன்' என நம்பியாரூரர் தம்மைப்பற்றிக் கூறுங் குறிப்புக் களால் இவர், தம் இளமைப்பருவத்தே உள்ளத்தைக் குளிர்விப்பதாய்த் தமக்குரிய தாய்மொழியாகிய தமிழி லுள்ள தொன்னுால்களையும் வடமொழி நூல்களேயும் முறையாகப் பயின்று புலமைச் செல்வராய்த் திகழ்ந் தாரென்பது நன்கு தெளியப்படும்.

இங்ங்ணம் இளம்பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நாவலூர் நம்பியாகிய இப்பெருந் தகையார், நரசிங்க முனயரையரது ஆட்சியில் இள வரசராயிருந்து பழகி நாட்டு மக்களுக்கு நலம் பல புரி யும் வேந்தராய் விளங்கிஞர். இச்செய்தி, - 1. சுந்தரர் தேவாரம் 7-57-12, 2.

. او و س2 ?س 7 وو 3. 罗罗 7-54–10. 4.

.0 i س- i 7-4 و و