பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

பன்னிரு திருமுறை வரலாறு


'நாடெலாம் புகழ் நாவலுனராளி நம்பிவன்ருெண்டன்’ எனத் தம்மைப் பற்றியும்,

வேந்தராயுலகாண்டு அறம்புரிந்து

வீற்றிருந்த இவ்வுடல்’

எனத் தமது உடம்பைச் சுட்டியும் இவ்வாசிரியர் கூறும் மொழிகளால் இனிது விளங்கும்.

இறைவனுல் தடுத்தாட் கொள்ளப் பெறுதல் இவ்வாறு திருமுனைப்பாடி நாட்டின் இளவரசராய் விளங்கிய நம்பியாரூரர்க்குத் திருமணப்பருவம் எய் தியது. அவருடைய தந்தையாராகிய சடையனர், தங்கள் குடும்பத்தோடு ஒத்த சிறப்புடைய குடும்பத் தினராய்ப் புத்துரிலே வாழும் ஆதி சைவ வேதிய ராகிய சடங்கவி சிவாசாரியாருடைய திருமகளேத் தம் புதல்வர்க்கு மணஞ்செய்து தரும்படி முதியோர் சிலரை அவல் பால் கட்பேச அனுப்பினர். அஃதுணர்ந்த சடங்கவி சிவாசாரியார். பெருமகிழ்ச்சி யுடைய ராய் முதியோர்களே வரவேற்று உபசரித்தார். தம்முடைய திருமகளே நம்பியாரூரர்க்கு மணஞ்செய்து தருவதாக அன்புடன் கூறினர். முதியோர்களும் அவரது இசை வினைச் ச ைட ய னு ர் பா ற் .ெ ச ன் று தெரிவித் தார்கள். அது கேட்டு மன மகிழ்ந்த சடைய ஞர், திருமண நன்ேைள உறுதிசெய்து கொண்டு நம்பியாரூரரது அரச பதவிக்கு ஒத்த வகையிலே சுற். றத்தார் நண்பர் முதலிய பலருக்கும் திருமணத் திரு முகம் அனுப்பினர். சடங்கவி சிவாசாரியாரும் தம் முடைய ஊராகிய புத்துாரிலே நாவலுர்த் தலே வரது திருமணம் நிகழ்தற்கு வேண்டிய எல்லாவற்றையுங் குறைவறச் செய்து முடித்தார்.

திருமணத் திருநாளின் முதல்நாளில் மணமகன ராகிய நம்பியாரூரர்க்குக் காப்பணிதல் முதலிய மங்

5. 9ጛ 7-64-10. 6. , 7-64-6.