பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 26 í

கலச் சடங்குகள் மறைமுறைப்படி செய்யப்பெற்றன. ம நாள் வைகறைப் பொழுதில் துயிலுணர்ந்தெழுந்த நம்பியாரூரர், தமக்குரிய நாட்கடன்களே முடித்துத் திருமஞ்சனமாடினர். மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொலியத் திருமணக் கோலங் கொண்டார். சிவபெருமானுடைய திருவடிகளே நெஞ் சத் திருத்தித் திருவெண்ணிறனிந்து மங்கல வாத்தி யங்கள் முழங்கக் குதிரைமீதமர்ந்து நண்பர்களும் சுற்றத்தாரும் சூழ்ந்து போற்றப் புத்து ரை அடைந் தார். மங்கல மகளிர் நிறைகுட முதலியன ஏந்தி எதிர் கொண்டு அழைத்தார்கள். ந. பியாரூரர் குதிரையை விட்டு இறங்கிப்போந்து திருமணப் பந்தருள் மண த் தவிசில் அமர்ந்திருந்தார்.

இங்ங்ணமாக, ஆலால சுந்தரரைத் தடுத்தாட் கொள்வதாகத் திருக்கயிலாயத் திலே முன்பு உறுதி கூறிய சிவபெருமான், தாம் கூறிய வண்ணம் நம்பி யாரூரரைத் தடுத்தாட்கொள்ள விரும்பி, முதுமை மிக்க வேதியராகத் திருமேனி கொண்டு, தளர்ந்த நடையினராய்த் தண்டு ன்றித் திருமணப் பந்தருள்ளே துழைந்தார். அங்குத் திருமணங் காண வந்திருந்த பெருமக்களே நோக்கி, சபையோர்களே, யான் கூறும் இம்மொழியைக் கேட்பீராக’ என்றுரைத்தார். அவ ரது வருகையை யறிந்த மறையவர்களும் நம்பியா ரூரரும் 'நன்று உமது நல்வரவு, நாங்கள் செய்த தவப்பயனே யாம் நீவிர் சொல்லக் கருதியதனச் சொல்லுமின் என்றனர். முதிய ராய் வந்த அவ் வேதியர், மன மகளுகிய நாவலூரரை நோக்கி எனக் கும் உனக்கும் ஒரு பெருவழக்கு உளது. அதனே த் தீர்த்த பின்னரே நீ திருமணஞ் செய்து கொள்ளுதல் வேண்டும்’ எனக் கூறினர். அது கேட்ட நம்பியாரூரர், மறையவரை நோக்கி என்பால் உனக்கு வழக்கு இருக்குமாயின் அதனைத் தீர்த்தன் றித் திருமணஞ் செய்யேன். அதனே முழுதுஞ் செல்லுக’ என் ருர்,