பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பன்னிரு திருமுறை வரலாறு


நம்பியாண்டார் நம்பியின் உதவிபெற்றுத் தேவா ரத் திருமுறைகளேத் தில்லேத் திருக்கோயிலிற்கண்டு வெளிப்படுத்திய சோழ மன்னனைத் திருமுறை கண்ட சோழன் எனப் போற்றுவர். அவ்வேந்தர் பெருமானது நன்முயற்சியால் சைவத் தி ரு மு றை க ள் தேடித் தொகுக்கப்பெற்ற வரலாற்றை விரித்துக்கூறும் நூல் திருமுறை கண்ட புராணமாகும். இதனே இயற்றியவர் சைவ சித்தாந்தசந்தா ன சிரியர் நால்வருள் ஒருவராகிய கொற்றவன் குடி உமாபதி சிவாசாரிய ரென்பது தொன்று தொட்டு வழங்கி வருஞ் செவிவழிச் செய்தி யாகும். திருமுறை கண்ட புராணம் நாற்பத்தைந்து செய்யுட்களே யுடையது. இந்நூலிற் கூறப்பட்ட செய்தி களேச் சுருக்கமாக ஆராய்வோம்.

காவிரிப யும் சோழவள நாட்டிலே திருவாரூரிலே தியாக ராசப்பெருமானே வழிபட்டு அபயகுலசேகரன் என்னும் சி ற ப் பு ப் பெயருடைய இராசராசசோழன் சோழநாட்டை ஆட்சி புரிந்துவந்தான். அந் நாளிலே அவனது அவைக்களத்திலே எழுந்தருளிவருஞ் சிவ னடியார்கள், மூவர் பாடிய தேவாரப் பதிகங்களுள் தமக்குத் தெரிந்த ஒவ்வொரு திருப்பதிகத்தையே ஒதக்கேட்டுக் கைகளிரண்டும் தலேமேற் குவிந்திடக் கண்களில் தாரை த ைர ய க நீர் சொரிய மெய்ம்மயிர் சிலிர்ப்ப நெஞ்சம் நெக்குருக இறைவனே வழிபடும் இன்ப நிலே அம் மன்னனுக்கு உளதாயிற்று. தேனினுமினிய தேவாரப் பதிகங்களின் திருவருள் நலத்தில் திளேத்த வேந்தன், மூவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களெல்லாவற்றையும் தேடிக் கண்டு ஒரு சேரத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். தேவா ரத் திருப்பதிகங்களே எங்குந் தேடியும் அவை முழுதுங் கிடைக்கவில்லே. அதனுல் சோழமன்னன் பெரிதும் வருந்தின்ை.

திருநாரையூரிற் பொல் லாப் பிள்ளேயார்க்குப் பூசனே புரியும் ஆ திசைவக் குடும்பத்தில் சைவ சமயம் வாழ ஒரு நற்புதல்வர் பிறந்தருளினர். அக் குழந்தை