பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் தொடர்களில் நம்பியாரூரரே விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்,

நாவலூரரைத் தடுத்து ஆட்கொள்ளுதற்பொருட் டுச் சிவபெருமான் படைத்துக் காட்டியருளிய அற்புதப் பழ ஆவணமாகிய ஆளோலே, இனிய தமிழில் எழுதப் பெற்றிருந்ததென்பது,

தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ்

சோதிசென்ருங் கெழு துந் தமிழ்ப்பழ ஆவணங்காட்டி யெனக்குன்குடி முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற் றவன்முரல்

தேன் ஒழுகு மலரினற் ருரெம்பி ரான்நம்பி யாரூரனே.

என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியால் இனிது புலனும்,

இவ்வாறு உலகத்தார் காணத் தமிழ்ப்பழ ஆவ னங் காட்டித் தம்மை ஆட்கொண்டருளிய பெருமான், வெண்ணெய் நல்லூரில் திருவருட்டுறை என்னும் திருக்கோயிலிற் புகுந்துமறைந்தருளிய செய்தியை,

  • அன்றுவந்தென்னே அகலிடத்தவர் முன்

ஆளதாகவென்று ஆவணங்காட்டி நின்று வெண்ணெய் நல்லூர்மிசை யொளித்த

நித்திலத்திரள் தொத்தினை எனவும்,

ஒட்டியாட்கொண்டு போயொளித்திட்ட உச்சிப்போதனை

எனவும் வரும் தொடர்களில் நம்பிய ரூரர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நிகழ்ந்த வழக்கில் நீ நம்முடன் வன்மையாகப் பேசினமையால் வன் ருெண்டன் என்ற பெயரினேப் பெற்றனே என அருட் டுறை யிறையவர் தமக்கு அருள்செய்த திறத்தை.