பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

பன்னிரு திருமுறை வரலாறு


திருவளரொளியினதாய்த் திகழும் ஞானமயமான திருச் சிறறம்பலத்தின் முன்னேயுள்ள திருவணுக்கன் திரு வயிலே யடைந்தார். உலகெலாம் இன்புற மன்றுளே திருவருட் கூத்தியற்றும் கூத்தப்பெருமானேக் கண்டு அன்பு மீது த் தலைமீது குவித்த கையினராய்த் திருக் களிற்றுப்படியின் மருங்கே வீழ்ந்து வாைங்கினர்.

ஆடவல்ல பெருமான க் கண்டு கும்பிடும் நம்பியா ரூரர், தம்முடைய ஐம்பொறிகளின் அறிவெலாம் கண்களாகிய ஒருபொறியி னளவிலே சென்று அடங்கவும், முக்குணங்களும் இறைவனது திருவரு ளுணர்விலே தோய்ந்தமையால் திருந்திய சாத்துவிக குணமேயாகத் திகழவும், திங்களனி சடைப்பெ ரு ன் ஆடி ருளும் திருக்கூத்தினுல் வந்த ல்லையறற பேரின்ப வெள்ளத்திலே திளேத்து, மாருத பெரு மகிழ்ச்சியினல் மன மலரப்பெற்ருர் தேய்ந்து இறக்கும் இடர் நிலை யெய்திய பிறைமதியும் தெளிவு பெற்றுக் குறைவிலா ஒளியுடன் வளர்தற்கு இடமாய் விளங்கும் செஞ்சடைக் கடவுளே, நினது திருவருட் கூத்தினைத் கண்டு கும்பிடும் இப்பேறு பெற்றமையால் மண்ணுல கத்தில் எந்த இம் மனிதப் பிறவியே அடியேற்குத் தூய்மையான பேரின் பத்தை நல்குவ தாயிற்று ன்று கூறிக் கண்களினின்றும் ஆனந்தக் கண்ணிர் சொரியக் கைகளே உச்சிமேற் குவித துப் பண்ணில்ை நீடி அறி தற்கரிய பெருமைவாய்ந்த இன்னிசைத் திருப்பதி கத்தைப்பாடி இறைவனைப் பரவிப் போற்றிஞர்.

அப்பொழுது தில்லே ச் சிற்றம்பல வர் திருவருளால் 'நீ தி வாரூரில் நம்பால் வருக என்ற திருவருள் மொழி ஆகாயத்தே தோன்றியது. நாவலூரர் அவ்வருளாணை யைச் சிரமேற்கொண்டு கூத்தப்பெருமானத் தொழுது விடைபெற்றுப் பொன்னம்பலத்தை வ ல | வ ந் து வணங்கி எழுநிலைக் கோபுரத்தையும் திருவீதியையும் இறைஞ்சித் தில்லே நகரத்தின் தென் திசைவாயில்