பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

பன்னிரு திருமுறை வரலாறு


மானேக் கழுமல வளநகர்க் கண் டுகொண்டேனே ? என நம்பியாரூரர் குறிப்பிட்டுப் போற்றுதலால் கழுமலத் திறைவர் ஆரூரர்க்குக் காட்சி கொடுத்தருளிய செய்தி இனிது புலளுதல் காணலாம்.

தம்பிரான் தோழராதல்

சீகாழிப்பதியில் இறைவனது திருவருட்கோலத் தைக் கண்டு மகிழ்ந்த நம்பியாரூரர், திருக்கோலக்கா, திருப்புன்கூர் முதலிய திருத்தலங்களை வணங்கிச் செந்தமிழ்ப் பாமாலே பாடிப் போற்றிக் காவிரியில் நீராடி அதன் தென்கரையை அடைந்தார். மயிலாடு துறை, அம்பர் மாகாளம், திருப்புகலூர் ஆகிய தலங் களே இறைஞ்சித் திருவாரூரருகே சென்று சேர்ந்தார். அந் நிலேயில் திருவாரூரிற் கோயில்கொண்டருளிய இறைவர், ஆரூரில் வாழும் அடியார்களுக்கு முன்னே தோன்றி நம் ஆரூரனுகிய வன்ருெண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றன். நீங்கள் மகிழ்ந்து அவனே எதிர் கொண்டு அழைப்பீராக என அருள் செய்து மறைந்தருளினர். இறைவனது திருவருள் இதுவென வுணர்ந்த அடியார்களும் நகர மாந்தரும் திருவா ரூரைச் சிறப்புற அலங்கரித்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஆரூர்த் திருமதில் வாயிற் புறத்துச் சென்று நம்பியாரூரரை எதிர்கொண்டு வணங்கினர்கள். திரு நால லூ ரரும், தம்மை எதிர்கொண்டழைத்த அடியார் களேக் கைகூப்பித் தொழுது, எந்தையாகிய சிவபெரு மான் வீற்றிருந்தருளும் பெருஞ் சிறப்புடைய திருப் பதியும் இத்திருவாரூரே. இங்கெழுந்தருளிய இறைவர் எளியேனே யும் ஆட்கொண்டருளும் இசைவுடை யாரோ என்பதன அன்புகூர்ந்து அவர் பால் கேட்டுத் தெரிவிப்பீராக என வினவி வேண்டும் குறிப்புடன்,

கரையுங் கடலு மலேயுங் காலேயு மா லேயு மெல்லாம் உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்