பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

பன்னிரு திருமுறை வரலாறு


அழைத்துப் போற்றுவாராயினர். இறைவன் பணித்த வண்ம்ை நம்பியாரூரர், என்றும் திருமணக்கோலப் பெருமாள் எனப் பேற்றும் வண்ணம் சுந்தர வேடங் களேயுடைய தேைவந்த ராய்ப் பூங்கோயிலமர்ந்த பெரு மானே நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ் மாலே படி மகிழ்ந்திருந்தார்.

இவ்வாறு சிவபெருமான் நம்பியாரூரர்க்குத் தன் னேத் தோழனுகத் தந்தருளிய அற்புத நிகழ்ச்சியை,

தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த

துரிசுகள் பொறுக்கும், நாதனே ? (7–68–8)

எனவும்,

‘ என்னுடைய தோழனுமாய் யான் செய்யும்

துரிசுகளுக் குடகிை ’ (7-81–1) எனவும்,

  • என்றனே ஆள் தோழனே ’ (7–84–9)

எனவும் வரும் தொடர்களால் தம்பிரான் தோழராகிய சுந்தார் நெஞ்சம் நெக்குருகிப் போற்றியுள்ளமை இங்கு தினேக்கத் தகுவதாகும்.

பரவையார் திருமணம்

திருக்கயிலாய மலையிற் பார்வதி தேவியாருடைய சேடியர்களாய் ஆலால சுந்தரராற் காதலிக்கப்பெற்ற மகளிரிருவருள் ஒருவராகிய கமலினியார் என்பார், திரு வாரூரிலே உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் எனும் பெயரைப் பெற்றுச் செந்தாமரை மலரில் வாழும் திருமகளே இவ்வாறு தோன்றின ளென்று சொல்லும்வண்ணம் பே ர ழ கு ைட ய ரா ய் வளர்ந்து மங்கைப்பருவ மெய்தினர். உமையம்மை யாருடைய பாங்கியருள் ஒருவராய்த் திருவடித் தொண்டு புரிந்த பண்டையுணர்வு பரவையாரது உள் களத்திருந்து செலுத்துதலால் அந்நங்கையார் பூங்கோயி