பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பன்னிரு திருமுறை வரலாறு


திரு நாரையூரில் நிகழ்ந்த இத்திருவருட் செய்தி தமிழ்நாடெங்கும் பரவியது. இதனேக் கேட்டு வியந்த இராசராச மன்னன், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரை வழிபடுதற் பொருட்டுப் பழ வகைகள், தேன், அவல், எள்ளுண்டை முதலிய படைப்புப் பொருள்களை நிறையக் கொண்டு திருநாரையூரை யடைந்து நம்பியாண்டார் நம்பியை வ ண ங் கி ைன். நம்பியும் மன்னன் விரும்பிய வண்ணம் அ வ ன் கொணர்ந்த நிவேதனப் பொருள்களேப் பிள்ளேயார் திருமுன்னர் வைத்த அளவில் அன்பாற் படைத்த அவையெல்லாவற்றையும் பிள்ளையார் திருவமுது செய் தருளினர். அதுகண்டு மகிழ்ந்த மன்னன், நம்பியாண் டார் நம்பியை வணங்கி, வேதியனே சமய குரவர் மூவர் அருளிச் செய்த தேவாரத் திருமுறைகளும் திருத் தொண்டர் வரலாறும் இந் நிலவுலகத்தில் விளக்கம் பெறுதல் வேண்டும்” என வேண்டிக்கொண்டான் , வேந்தனது வேண்டுகோளில் அமைந்த அன்பின் திறத்தை யுணர்ந்த நம்பியாண்டார் நம்பி, பொல்லாப் பிள்ளையாரை இறைஞ்சி நின்று எம்பெருமானே தேவாரத் திருமுறைகள் இருக்கும் இடத்தையும் திருத் தொண்டர்களுடைய வரலாறுகளேயும் அடியேனுக்கு அருளிச் செய்தல் வேண்டும் ” என வேண்டிக்கொண் டார். அவரது வேண்டுகோளுக்கிசைந்த பொல்லாப் பிள்ளையார், தில் லேயில் கூத்தப்பெருமான் திருநடஞ் செய்யும் பொன்னம்பலத்தின் அருகிலே தேவார ஆசிரியர்கள் மூவருடைய அழகிய கைகளின் அடை யாளமுள்ள அறையினுள்ளே தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப்பெற்றுள்ளன என்று கூறித் திருத் தொண்டர்களுடைய வரலாறுகளேயும் தி ரு வ ய் மலர்ந்தருளினர்.

அருளுரையாகிய அதனேக் கேட்டு மகிழ்ந்த நம்பி யாண்டார் நம்பியும் அபயகுலசேகரனும் தில்லையை யடைந்து கூத்தப்பெருமானே வணங்கினர்கள். பின்பு சோழமன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மேற்றிசை