பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

பன்னிரு திருமுறை வரலாறு


மண்டபத்தில் ஒருங்கு குழுமியிருக்கும் சிவனடியார் க. இ. க் கண்டார், அன்புடைத் தொண்டர்களாகிய இவர்களுக்கு யான் அடியன கும் நாள் எந்நாளே.ா என்னும் நினைவுடைய நாய்ப் புற்றிடங்கொண்ட பெரு பானே வழிபடுதற்குத் திருக்கோயிலினுள்ளே சென் ருர், அந்நிலையில் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களுள் ஒருவராகிய விறன்மிண்டர் என் பார், வன்ருெண்டர் அடிபார் திருக்கூட்டத்தைப் பணி பாது நேரே திருக்கோயிலுக்குச் செல்கின் ருரெனக் கருதி, ‘சிவனடியார் திருக்கூட்டமானது. தன் சீனப் பேணுது செல்லும் நம்பியாரூரனுக்கும் புறம்பு; அவ துணுக்குப் பிராணுகிய சிவபெருமானுக்கும் புறம்பு’ என வெகுண்டுரைத்தார்.

இங்ங்னமாக, அடியவர்க்கு அடியகுவேன், என் னும் பேரார்வத்துடன் திருக்கோயிலுள் வழிபடச் செல் லும் வன்ருெண்டர்க்கு எதிரே ஆளுரிறைவர் தோன்றிக் காட்சிகொடுத்தருளிஞர். வன்ருெண்டரும் தமக்கு எளிவந்தருளிய இறைவரது பெருங்கருணைத் திறத்தை வியந்து பணிந்து போற்றினர். தொண்டர்க்குத் தொண்ட ராம் தற்பேற்றினைத் திருநாவலூரர்க்கு அளித்தருளத் திருவுளங்கொண்ட இறைவர், அடியார் களது திருத்தொண்டின் திறத்தையும் சால்பினையும் சுந்தரர்க்கு அறிவுறுத்தியருளி, நம்முடைய அடியார் களே முறைப்படவணங்கி அவர்களது திருத்தொண்டின் திறத்தை விரித்துரைக்கும் திருப்பதிகச் சொன்மாை பாடிப் போற்றுவாயாக எனப் பணித்தருளினர். அப் பணியினத் தலைமேற்கொண்ட வன்ருெண்டர், ஆரூ சிறைவரையிறைஞ்சி நின்று ‘எம்பெருமானே, நின் மெய்யடியார்களது வரலாறு இன்னதென்றும் அவர்தம் பெருந்தகைமை இதுவென்றும் உணராத தமியேன் எங்ங்னம் பாடவல்லேன்: அடியார்களது பொருள் சேர்புகழை விரித்துரைக்கும் திருப்பதிகத்தினேப்படும்