பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

பன்னிரு திருமுறை வரலாறு


ல்ை அணைத்தெடுத்துத் தம் மடிமீது அமர்த்திக் கொண்டு நெஞ்சம் நெக்குருக ச்சிமோந்து அக்குழந் தைகள் விரும்பிய பொருள்களேக் கொடுத்து மகிழ்ந் தார்

இங்கனம் கோட் புலியாருடைய புதல்வியரைத் தம் மக்களாக ஏற்றுக்கொண்ட சுந்தரர். அவருடன் திரு நாட்டியத்தான் குடிக் கோயிலே யடைந்து பூணுகுணுவதே ரரவம் என்ற திருப்பதிகத்தினைப் படி, மாணிக்கவண்ண கிைய இறைவனே வணங்கிப் போற்றினுர், நாட்டியத்தான் குடி இறைவனைப் பரவிப் பாடிய இத்திருப்பதிகத் திருக்கடைக்காப்பில் கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி ’ எனத் தம்மை உபசரித்துப் போற்றிய கோட்புலி நாய, ஞரைச் சிறப்பித்துப் போற்றியதுடன் அவருடைய புதல்வியாகிய சிங்கடியைத் தாம் மகளாக ஏற்றுக் கொண்டருளிய அன்பின் திறம் விளங்க, நாட்டியத் தான்குடி நம்பியை நாளுமறவாச் சேடார் பூங் குழற் சிங்கடியப்பன் திருவாரூரன் எனத் தம்மைக் குறிப் பிட்டு மகிழ்ந்தார். இவ்வாறே கோட்புலியாருடைய மற்ருெரு புதல்வியாகிய வனப்பகை ன்ற பெண்ணே யும் தம் புதல்வியாக ஏற்றுக்கொண்ட திறத்தைப் புலப்படுத்துங் கருத்துடன் தம்மை வனப்பகையப் பன் என்ற பெயரால் பல பதிகங்களிலும் குறிப்பிட் டுள்ளார் இவ்வாறு கோட்புலி நாயனர் திருநாவ லூரர்க்குச் சிறப்புடைய நண்பராம் பேறுபெற்று விளங்கிய செய்தியை,

குற்றமறுக்குநங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற அருட்கட லென்றுல கேத்தும்

பெருந்தகையே’

என வரும் தொடரால் நம்பியாண்டார் நம்பி குறிப்பிட் டுள்ளமை இவண் நினேக்கத் தகுவதாகும்.