பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

பன்னிரு திருமுறை வரலாறு


தலைக்கு அணையாகக் கொண்டு அவற்றின் மேல் மேலா டையை விரித்துத் துயில் கொண்டார். பின்பு நம்பியா ரூசர் துயிலுணர்ந்தெழுந் தபொழுது தலைக்கு அணே யாக அடுக்கிவைத்த செங்கற்கள் எல்லாம் பொன் கட்டிகளாயிருந்தன. அதுகண்டு வியப்புற்ற சுந்தரர் புகலூரிறைவர் திருவருகளத் துதித்துத் திருக்கோயி லினுள்ளே போந்து இறைவனே வணங்கி,

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்

சார்வினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதேயெந்தை

புகலூர் பாடுமின் புல வீர்காள் இம்மையே தருஞ்சோறுங் கூறையும்

எத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே.சிவலோகம் ஆள்வதற் கியாது மையுற வில்லையே.

என வரும் திப்பதிகத்தைப்பாடி பொற்றினர்.

இங்கனம் நம்பியாரூரர் பொய்ம்மையாளரைப் பாடாது புகலூர்ப்பெருமானப் போற்றிப் பொன்பெற்ற செய்தியின,

பல்லவை செங்கதிரோனேப் பறித்தவன் பாதம் புகழ் சொல்லவன் தென்புக லூரரன்பால் தூயசெம்பொன்

கொள்ள வல்லவன் ’ எனவரும் தொடரால் நம்பியாண்டார் நம்பி குறிப் பிட்டுள்ளார்.

நம்பியாரூரரது கருத்தறிந்து அவர் வேண்டிய பொன்னே விரைந்தளித்தமைய ல் எதிரிலின்பம் இம் மையே தருவார்’ எனப் புகலூர்ப் பெருமானச் சேக் கிழாரடிகள் பாராட்டிப் போற்றுவர்.

புகலூரிறைவன் அளித்த பொன் கட்டிகளேயெடுத் துக்கொண்டு அடியார்களுடன் அங்கிருந்து புறப்பட்ட